உள்ளூர் செய்திகள்

மீன் வளர்ப்பு குறித்த புத்தகங்கள் வெளியிடப்பட்டது.

மீன் வளர்ப்பு விவசாயிகளுக்கான கருத்தரங்கம், கண்காட்சி தொடக்கம்

Published On 2022-09-23 10:03 GMT   |   Update On 2022-09-23 10:03 GMT
  • நிகழ்ச்சியில் பல்கலைக்கழகம் உருவாக்கிய மிதவைக்கூண்டு மாதிரி வெளியிடப்பட்டது.
  • மீன் வளர்ப்பு குளத்தில் பரிசல் பயணம், அலங்கார மீன் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர்:

தமிழ்நாடு மீன்வளக் கழகத்தின் தஞ்சாவூர் சூரக்கோட்டையில் உள்ள வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையத்தில் இன்று மீன் வளர்ப்பு விவசாயிகளுக்கான கருத்தரங்கம், கண்காட்சி தொடங்கியது.

நிகழ்ச்சிக்கு வந்தவர்களை வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு இயக்ககத்தின் இயக்குனர் ஸ்டீபன் சம்பத்குமார் வரவேற்றார்.

உணவு தொழில்நுட்பம் தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனம் தஞ்சாவூர் இயக்குனர் லோகநாதன் சிறப்புரையாற்றினார்.

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தர் சுகுமார் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் பல்கலைக்கழகம் உருவாக்கிய மிதவைக்கூண்டு மாதிரி வெளியிடப்பட்டது.

தொழில்நுட்ப கையேடுகள் வெளியிடப்பட்டன. நீருயிரி வளர்பாளர் கூட்டம் சிறப்பு மலர் வெளியிடப்பட்டது.

மேலும் நீருயிரி வனப்பாளர் சேவை செயலி வெளியிடப்பட்டன.

இதில் முன்னணி மீன் தீவன நிறுவனங்களின் அரங்குகள், மீன் வளர்ப்பு குளத்தில் பரிசல் பயணம், அலங்கார மீன் கண்காட்சி நடைபெற்ற வருகிறது.

இதில் வண்ணமயமான அலங்கார மீன் தொட்டிகளுடன் கூடிய அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

மீன், இறால் போன்றவற்றை கொண்டு செயல்படும் மீன் உணவுப் பொருள் விற்பனை கூடம் அமைக்கப்பட்டு மீன் உணவுப் பிரியர்களுக்கு வெவ்வேறு வகையான மீன் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அயிரை மீன் வளர்ப்பு தொழில்நுட்ப காணொளி வெளியீடு, கூண்டுகளில் மீன் வளர்ப்பு தொழில்நுட்ப வெளியீடு, திலேப்பியா மீன் வளர்ப்பு குறித்த புத்தகங்கள் வெளியீடு, சூரிய ஒளியில் இயங்கும் காட்சி புகுத்திகளின் செயல் விளக்கம் ஆகியவற்றை மீன்வளப் பல்கலைக்கழக துணைவேந்தர் சுகுமார் வெளியிட அதனை சிறப்பு விருந்தினர் லோகநாதன் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து மீன்வளப் பல்கலைக்கழக வளங்குன்றா மைய இயக்குனர் ஸ்டீபன் சம்பத்குமார் ஒருங்கிணைப்பில் நீருயிரி வளர்பாளர் கூட்டம் நடைபெற்றது.

முடிவில் வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையத்தின் தலைவர் செந்தில்குமார் நன்றி கூறினார்மீன் வளர்ப்பு விவசாயிகளுக்கான கருத்தரங்கம், கண்காட்சி தொடக்கம்.

நாளையும் இரண்டாவது நாளாக கருத்தரங்கம், கண்காட்சி நடைபெற உள்ளது.

Tags:    

Similar News