உள்ளூர் செய்திகள்

சாதனை படைத்த மாணவிகளை கைப்பந்து கழக தலைவர் ராஜ்குமார் பாராட்டிய காட்சி.

ஜூனியர் கைப்பந்து போட்டியில் சாம்பியன் வென்ற சேலம் வீராங்கனைகளுக்கு பாராட்டு

Published On 2022-11-11 10:13 GMT   |   Update On 2022-11-11 10:13 GMT
  • இமாசலபிரதேசம் சிம்லாவில் கேலோ இந்தியா என்ற அகில இந்திய அளவில் (19 வயதுக்கு உட்பட்ட) பெண்களுக்கான ஜூனியர் கைப்பந்து போட்டி நடைபெற்றது
  • இறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது.

சேலம்:

இமாசலபிரதேசம் சிம்லாவில் கேலோ இந்தியா என்ற அகில இந்திய அளவில் (19 வயதுக்கு உட்பட்ட) பெண்களுக்கான ஜூனியர் கைப்பந்து போட்டி நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, குஜராத், இமாசல பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து கைப்பந்து அணிகள் கலந்து கொண்டு விளையாடின.

தமிழ்நாடு அணி சார்பில் சேலம் மாவட்டம் தேவியாக்குறிச்சி பாரதியார் கலை அறிவியல் கல்லூரி மாணவி கார்த்திகா, ஆத்தூர் பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி நித்திஷா ஆகியோர் கலந்து கொண்டு விளையாடினர்.

இறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது.

இதனை தொடர்ந்து அகில இந்திய அளவிலான கைப்பந்து போட்டியில் சாதனை படைத்த 2 வீராங்கனைகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி நேற்று அழகாபுரத்தில் நடந்தது. இதில், சேலம் மாவட்ட கைப்பந்து கழக தலைவர் ராஜ்குமார் கலந்து கொண்டு சேலத்தை சேர்ந்த 2 வீராங்கனைகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் சண்முகவேல், மாவட்ட துணைத்தலைவர் ராஜாராம், கைப்பந்து பயிற்சியாளர் பரமசிவம், நிர்வாகி நந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News