பென்னாகரத்தில் புதிய பஸ் நிலைய கட்டுமானப் பணிகளை அமைச்சர் ஆய்வு
- ரூ.4 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
- கூடுதல் ஆட்களை நியமித்து பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
பென்னாகரம்,
தருமபுரி மாவட்டம், பென்னா கரம் பேரூ ராட்சியில் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த பஸ் நிலையம் அகற்றப்பட்டு மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் கட்ட ஒப்பந்தம் விடப்பட்டு, தற்பொழுது ரூ.4 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் புதியதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை குறைந்த ஆட்களை வைத்து பணி நடைபெறுவதால் உடனடியாக கூடுதல் ஆட்களை நியமித்து பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி, பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி, பென்னாகரம் வட்டாட்சியர் சவுகத் அலி, பேரூராட்சி தலைவர் வீரமணி, செயல் அலுவலர் கீதா,பேரூராட்சி துணைத் தலைவர் வள்ளியம்மாள் பவுன்ராஜ், இளநிலை பொறியாளர் பழனி, பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.