உள்ளூர் செய்திகள்

கோபால் செட்டி தெருவில் நடைபெற்று வரும் சாலை பணியை பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி ஆய்வு செய்த காட்சி.

பாலக்கோட்டில் தார்சாலை அமைக்கும் பணி

Published On 2023-08-30 09:46 GMT   |   Update On 2023-08-30 09:46 GMT
  • 2.5 கிலோ மீட்டர் தூரம் புதிய தார்சாலை அமைக்க 1.47 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
  • தொடக்க பணிகளை பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி கடந்த மாதம் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

பாலக்கோடு, 

தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் உள்ள 8 வார்டுகளுக்கு உட்பட்ட முத்துகவுண்டர் தெரு, ரேஷன்கடை தெரு, தீர்த்தகிரி நகர், இடுகாட்டுக்கு செல்லும் பாதை, எச்.பி.கேஸ் ஏஜென்சி தெரு, கோட்டை தெரு, கோபால்செட்டி தெரு , கணம் பள்ளிதெரு, மணியகாரன் கொட்டாய், உள்ளிட்ட பகுதிகளில் நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2.5 கிலோ மீட்டர் தூரம் புதிய தார்சாலை அமைக்க 1.47 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதனையடுத்து தொடக்க பணிகளை பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி கடந்த மாதம் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.இப்பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்த நிலையில் கோபால் செட்டி தெருவில் நடைபெற்று வரும் சாலை பணிகளை பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது சாலை தரமானதாகவும், விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது உதவி பொறியாளர் பழனி உடன் இருந்தார்.

Tags:    

Similar News