வள்ளியூர் யூனியனில் 18 ஊராட்சிகளில் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம்
- வள்ளியூர் யூனியனில் உள்ள ஊராட்சி பகுதிகளில் உள்ளூர் நீராதாரத்தை வைத்து குடிநீர் பிரச்சி னையை உடனடியாக தீர்ப்பது தொடர்பான ஆலோ சனை கூட்டம் வள்ளியூரில் நடைபெற்றது.
- ராதாபுரம் தொகுதியில் குடிநீர் திட்டத்திற்கு மட்டும் ரூ.1,028 கோடியே 13 லட்சம் நிதியை முதல்-அமைச்சர் அளித்துள்ளார் என சபாநாயகர் அப்பாவு கூறினார்.
வள்ளியூர்:
வள்ளியூர் யூனியனில் உள்ள ஊராட்சி பகுதிகளில் உள்ளூர் நீராதாரத்தை வைத்து குடிநீர் பிரச்சி னையை உடனடியாக தீர்ப்பது தொடர்பான ஆலோ சனை கூட்டம் வள்ளியூரில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி பேசியதாவது:-
வள்ளியூர் யூனியனில் 18 ஊராட்சி மன்றங்கள் உள்ளது. இந்த ஊராட்சி மன்றங்களில் உள்ள சிறிய கிராமங்கள், வார்டு பகுதிகள், ஒன்றிய வார்டு பகுதிகள், மாவட்ட ஊராட்சி வார்டு பகுதிகள் அனைத்திலும் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பது தொடர்பாகத்தான் இந்த ஆலோசனைகூட்டம் நடத்தப்படுகிறது.
குடிநீர் பிரச்சினை, ஆழ்துளை கிணறுகளின் தேவை, பைப்லைன் தேவை களை விரிவாக தெரிவி த்தனர். உங்கள் பகுதிகளில் தற்போதுள்ள நீர் ஆதாரங்கள், ஆழ்துளை கிணறுகள், திறந்தவெளி கிணறுகள் ஆகியவற்றை ஊராட்சி ஒன்றிய அதி காரிகள், பொறி யாளர்கள் ஆய்வு செய்து ஆழ்துளை கிணறுகளின் நீராதாரத்தை கணக்கிட்டு உடனடியாக குடிதண்ணீர் விநியோகம் செய்யும் நடவடி க்கையை தொடங்குவார்கள்.
மோட்டார் இல்லாத ஆழ்துளை கிணறுகளில் மோட்டார் பொருத்துவது, பழுதான மோட்டார்களை சரிசெய்து மாற்றுவது, பைப் லைன்களை சரி செய்வது, பழுதடைந்துள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி மற்றும் தரைமட்ட தொட்டிகளை பழுபார்ப்பது இது போன்ற அனைத்து பணிகளுக்கும் அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுப்பார்கள்.
இவைகள் தவிர முன்னீர்பள்ளம் அருகே தாமிரபணி ஆற்றில் இருந்து ராதாபுரம் தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்க ளுக்கும் குடிதண்ணீர் வழங்கும் திட்டத்திற்கு முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.605 கோடி நிதியை அளித்துள்ளார்.
இது தவிர திசையன்விளை, மூலக்கரைப்பட்டி, பணகுடி, வள்ளியூர், ஏர்வாடி, நாங்குநேரி, திருக்குறுங்குடி பேரூராட்சிகளுக்கும் மற்றும் களக்காடு நகராட்சிக்கும் சேர்ந்து தனியாக குடிநீர் திட்டம் ரூ.423.13 கோடியில் தனியாக ஒரு திட்டத்திற்கு நிதியை தந்துள்ளார்கள்.
ஆக மொத்தம் ராதாபுரம் தொகுதியில் குடிநீர் திட்டத்திற்கு மட்டும் ரூ.1,028 கோடியே 13 லட்சம் நிதியை நமது முதல்-அமைச்சர் அளித்துள்ளார். இந்த திட்டங்கள் இன்னும் 18 மாதங்களில் நிறைவே ற்றப்பட்டு உங்கள் வீடு களுக்கு குடிநீர் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக வடக்கன் குளம், தனக்கர்குளம், காவல்கிணறு, செட்டிகுளம், லெவஞ்சிபுரம், கருங்குளம், ஆவரைகுளம் உள்ளிட்ட ஊராட்சி பிரதிநிதிகள் தங்கள் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கவேண்டும், மின்விநியோகம் சீரமைக்க ப்படவேண்டும், மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளிட்ட தேவைகள் குறித்து பேசினர்.
கூட்டத்திற்கு வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சேவியர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுரேஷ், பேரூராட்சி உதவி இயக்குனர் அனிதா, பொதுப் பணித்துறை செயற்பொ றியாளர் கனகராஜ், மின்சார வாரிய செயற்பொறியாளர் வளன்அரசு, பொதுப் பணித்துறை உதவி செயற் பொறியாளர் கென்னடி, நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.