சேலம் கோவில் திருவிழாவில் தகராறு: வாலிபருக்கு கத்திக்குத்து 3 பேர் கைது
- மந்தை மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
- அப்போது திடீரென அங்கிருந்த அசோக்குமார் (25) என்பவரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
சேலம்:
சேலம் அம்மாப்பேட்டை குமரன் தெருவில் உள்ள மந்தை மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. சம்பவத்தன்று, சாமி ஊர்வலத்தின்போது வாலிபர்கள் நடனமாடிக் கொண்டு சென்றனர்.
அப்போது நாராயண–நகரை சேர்ந்த கிஷோர்குமார் (வயது 19) என்பவரும் நடனமாடினார். இதற்கு அங்கிருந்த வாலிபர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அவரை அடித்து அப்புறப்படுத்தினர்.
இதனால் ஆத்திரம் அடைந்த கிஷோர்குமார், அவரது நண்பர்கள் சிலரை அழைத்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு சென்றார்.
அப்போது திடீரென அங்கிருந்த அசோக்குமார் (25) என்பவரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். காயம் அடைந்த அசோக்குமார் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தார்.
இது குறித்து அம்மாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி கிேஷார்குமார், மணிகண்டன், வினோத்குமார் ஆகியோரை கொலை முயற்சி வழக்கில் கைது செய்தனர். அதேபோல் கிேஷார்குமார் கொடுத்த புகாரின்பேரில் அசோக்குமார் உள்பட சிலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிேஷார்குமார் மீது கோவில் காமிரா உடைத்த வழக்கு உள்ளது என போலீசார் தெரிவித்தனர்.