உள்ளூர் செய்திகள்

சர்வதேச ஸ்னூக்கர் போட்டியில் குன்னூர் மாணவர் தேர்வு

Published On 2023-07-08 09:08 GMT   |   Update On 2023-07-08 09:08 GMT
  • பல போட்டிகளில் ஷாம் ஆல்வின் சாதனை படைத்துள்ளார்
  • ஸ்னூக்கா் பயிற்சியாளா் சூா்யநாராயணனிடம் பிரத்யேக பயிற்சி பெற்று வருகின்றனர்.

ஊட்டி,

சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக ஸ்னூக்கா் சாம்பியன்ஷிப் போட்டி நடக்க உள்ளது. இதில் பங்கேற்க நீலகிரி மாவட்டம், குன்னூரை சேர்ந்த ஷாம் ஆல்வின் (வயது 15) என்பவர் தகுதி பெற்று உள்ளார்.

இவர் அங்கு உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இது குறித்து ஷாம் ஆல்வின் கூறுகையில், நான் ரோனி ஓ சல்லிவனின் தீவிர ரசிகா்.

10 வயதில் இருந்து ஸ்னூக்கா் விளையாடி மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்து உள்ளேன். இந்த நிலையில் சவூதி அரேபியாவில் நடக்க உள்ள சர்வதேச ஸ்னூக்கர் போட்டிக்கு தகுதி பெற்று உள்ளது மகிழ்ச்சி தருகிறது என்று தெரிவித்தார். ஷாம் ஆல்வின் மூத்த சகோதரி மரியம் ஆக்னஸ் என்பவர் தேசிய அளவிலான ஸ்னூக்கா் போட்டியில் 2-வது இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது

ஷாம் ஆல்வின் தந்தையும், பயிற்சியாளருமான ஜோசப் செல்வகுமாா் கூறுகையில், சா்வதேச அளவிலான ஸ்னூக்கா் போட்டியில் இந்தியா சாா்பில் ஆல்வின் பங்கேற்பது பெருமை தருகிறது. இதற்காக அவர் ஸ்னூக்கா் பயிற்சியாளா் சூா்யநாராயணனிடம் பிரத்யேக பயிற்சி பெற்று வருவதாக தெரிவித்தார்.

Tags:    

Similar News