உள்ளூர் செய்திகள்

நீலகிரியில் 1,499 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

Published On 2022-07-10 08:10 GMT   |   Update On 2022-07-10 08:10 GMT
  • தடுப்பூசி முகாம்களில் காலை 7 மணி முதல் மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்காக வந்திருந்தனர்.
  • நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 5 லட்சத்து 67,989 போ் முதல் தவணை தடுப்பூசியும், 5 லட்சத்து 68,896 போ் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனா்

ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைெபற்றது.

மாவட்டத்தில் 1,439 நிலையான கொரோனா தடுப்பூசி முகாம்கள் மற்றும் 60 நடமாடும் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தது.

இந்த முகாம்களில் காலை 7 மணி முதல் மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்காக வந்திருந்தனர்.அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். காலை 7 மணிக்கு தொடங்கிய முகாம் இரவு 7 மணி வரை நடக்கிறது.

இன்று நடைபெறும் தடுப்பூசி செலுத்தும் பணியில் 5,996 பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த முகாமில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. குறிப்பாக நீரிழிவு, ரத்த அழுத்தம், இதயம் சம்பந்தமான நோயுள்ளவா்கள், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் சம்பந்தமான நோயுள்ளவா்கள், புற்றுநோய் சிகிச்சை பெறுபவா்கள் என அனைவரும் இன்று நடந்த முகாமில் பங்கேற்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 5 லட்சத்து 67,989 போ் முதல் தவணை தடுப்பூசியும், 5 லட்சத்து 68,896 போ் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனா்.நகராட்சி, பேரூராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் தங்களது பணியாளா்களைக் கொண்டு வீடு,வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News