உள்ளூர் செய்திகள்
கோவையில் மாநகராட்சி லாரி கிளீனருக்கு கத்திக்குத்து
- பணம் கொடுக்க மறுத்ததால் 2 வாலிபர்கள் கத்தியால் குத்தினர்.
- போத்தனூர் போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
கோவை,
கோவை வெள்ளலூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன்(23). இவர் மாநகராட்சி லாரியில் கிளீனராக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர் தனது வீட்டருகே நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் கோகுலகிருஷ்ணனிடம் பணம் கேட்டு மிரட்டினர். அவர் கொடுக்க மறுத்ததால் 2 பேரும் தகாத வார்த்தைகளால் பேசி கத்தியால் குத்தினர். பின்னர் அங்கிருந்து ஓடிவிட்டனர்.
காயம் அடைந்த கோகுலகிருஷ்ணனை அவரது நண்பர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். இதுகுறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாநகராட்சி லாரி கிளீனரை கத்தியால் குத்திய வெள்ளலூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த சர்புதீன்(25), கிஷோர்(25) ஆகிய 2 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.