பேரூர் அருகே விவசாய நிலங்களில் கூட்டம், கூட்டமாக சுற்றி திரியும் குதிரைகள்
- பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி, தீத்திபாளையம் ஊராட்சி பகுதிகள் உள்ளது.
- பஸ், லாரி, கார் உள்ளிட்ட வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
பேரூர்
சிறுவாணி மெயின் ரோட்டை ஒட்டி பேரூர் பேரூராட்சி, பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி, தீத்திபாளையம் ஊராட்சி பகுதிகள் உள்ளது.
இந்த பகுதிகளில் சிறுவாணி மெயின் ரோடு பகுதிகளில், ஏராளமான குதிரைகள் குட்டிகளுடன் காலை, இரவு நேரங்களில் கூட்டம், கூட்டமாக சுற்றி தெரிகிறது.
இதனால் காலை, மாலை வேலைக்கு சென்று திரும்பும் வாகன ஓட்டிகளும், பஸ், லாரி, கார் உள்ளிட்ட வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
மேலும், ஆறுமுகக் கவு ண்டனூர், பச்சாபாளையம், செட்டி பாளையம், காளம்பா–ளையம் உள்ளிட்ட கிராமங்களில் ஊருக்குள் புகுந்துவிடும் குதிரை கூட்டங்கள் உணவு மற்றும் தண்ணீருக்காக குடியிருப்பின் தெருக்களிலும், விவசாய நிலங்களிலும் புகுந்து, அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது.
ஒன்றுக்கொன்று கோபத்துடன் சண்டை போட்டுக் கொண்டு ஆவேசமாக ரோடுகளில் ஓட்டம் பிடிப்பதால் ஆங்காங்கே விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
கடந்த 2 ஆண்டுகளாக, பேரூரிலிருந்து சிறுவாணி மெயின் ரோட்டில் தெற்கே மாதம்பட்டி வரை, ஆங்காங்கே குதிரைகள் கூட்டம் கூட்டமாக ரோடுகளில் உலா வருகிறது.
இதனால் பைக், கார், லாரி, பஸ்களில் செல்லும்போது கடும் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகிறது. இதனால், காலையில் அலுவலகம் மற்றும் வேலைக்கு அவசரமாக செல்வோர் சிரமப்படுவதோடு, ரோடுகளில் குதிரைகள் கூட்டம், கூட்டமாக குறுக்கிலும், மறுக்கிலும் வேகமாக ஓடுவதால் ஆங்காங்கே விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம், பலமுறை தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டது.
மேலும், சிறுவாணி மெயின் ரோட்டை ஒட்டியுள்ள ஊருக்குள் புகுந்து விளை நிலங்கள் மற்றும் குடியிருப்பு தெருக்களில் உணவு மற்றும் தண்ணீருக்காக ஆவேசமாக கணைத்தபடி ஓட்டம் பிடித்து ரோட்டில், குறுக்கும், மறுக்கிலும் ஓடி வருகிறது.
யாரோ தனியார் மூலம், இந்த குதிரைகள் பொதுவெளியில் விடப்பட்டு வருகிறது. பேரூர் போலீசாரிடமும், இது தொடர்பாக பலமுறை புகார் கொடுத்தும், யாரும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பெரும் விபத்து ஏற்படும் முன், மாவட்ட நிர்வாகம் உடனடியாக இப்பிரச்சனையில் தலையிட்டு சுமூக தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.