உள்ளூர் செய்திகள்

வணிகவளாகம் அமைப்பதற்கு பூமிபூஜையை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார் உடன் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி உள்ளிட்டாேர் கலந்துகொண்டனர்.

கச்சா எண்ணை விலை - மத்திய அரசு மீது ஆ.ராசா எம்.பி., பரபரப்பு குற்றச்சாட்டு

Published On 2022-06-21 08:23 GMT   |   Update On 2022-06-21 08:23 GMT
  • அரசு நிதிநிலை அறிக்கையில் அவினாசி நகரில் ரூ. 6 கோடி மதிப்பீட்டில் புதிய வணிக வளாகம் கட்டும் கோரிக்கையை தமிழக முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார்.
  • நிர்மலா சீதாராமன் மற்றும் பிரதமர் மோடி சொன்ன பொய்கள் அம்பலமாகும் என்று ஆ.ராசா எம்.பி., பரபரப்பு குற்றச்சாட்டு,

அவினாசி :

திருப்பூர் மாவட்டம் அவினாசி போலீஸ் நிலையம் அருகில் வணிகவளாகம் அமைப்பதற்கு பூமிபூஜை நடந்தது இதில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.

இதையடுத்து அவினாசி இஸ்மாயில் வீதியில் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்துவைத்து பேசுகையில், இந்த ஆண்டு அரசு நிதிநிலை அறிக்கையில் அவினாசி நகரில் ரூ. 6 கோடி மதிப்பீட்டில் புதிய வணிக வளாகம் கட்டும் கோரிக்கையை தமிழக முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார். இந்த வணிக வளாகம் தரைதளத்துடன் 2 மாடிகள் அமைய உள்ள இந்த வணிக வளாகத்தில் 36 கடைகள் வர உள்ளது. இது பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்றார்.

இதையடுத்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், அக்னி பாத்திட்டத்தின் ஒரு முகம்தான் மக்களுக்கு தெரிந்துள்ளது. கோரமுகம் வேறுவிதமானது.அது விரைவில் வெளிவரும். அதை முறியடிக்க கூடிய அனைத்து ஆற்றலும் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் உள்ளது.விரைவில் அது பற்றி நாடாளுமன்றத்தில் எப்படிப்பட்ட நிலைப்பாடு எடுப்போம் என்பதை முதல்வர் அறிவுறுத்துவார்.

சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலை எவ்வளவு, சராசரியாக வளரும் நாடுகளில் என்ன விலை, இந்தியாவில் என்ன விலை என்பதை வெப்சைட்டில் தேடிப்பார்த்தால் நிர்மலா சீதாராமன் மற்றும் பிரதமர் மோடி சொன்ன பொய்கள் அம்பலமாகும் என்றார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி, திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் இல.பத்மநாபன், அவினாசி ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர் சரவணன் நம்பி, அவினாசி நகர செயலாளர் கே.சி.பொன்னுசாமி, பேரூராட்சி தலைவர் பொ. தனலட்சுமி, செயற்குழு உறுப்பினர் எஸ்.சாமிநாதன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News