உள்ளூர் செய்திகள் (District)

கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்களை படத்தில் காணலாம்.

கடலூர் புதுப்பாளையம் படவட்டம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-04-23 09:27 GMT   |   Update On 2023-04-24 04:49 GMT
  • கடலூர் புதுப்பாளையம் படவட்டம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது.
  • கோவில் விழா கடந்த 20-ந்தேதி கணபதி பூஜை யுடன் தொடங்கியது.

கடலூர்:

கடலூர் புதுப்பாளையத்தில் ஸ்ரீ படவட்டம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கடந்த 20-ந் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கி, மகா கணபதி ஹோமம், மகா லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம் நடந்தது. தொடர்ந்து 21-ந் தேதி முதல் கால யாக சாலை பூஜையும், 22-ந் தேதி காலை விசேஷ சந்தி, 2-ம் கால யாக சாலை பூஜையும், அன்று மாலை 3-ம் கால யாக சாலை பூஜை, காயத்ரி மந்திர ஹோமம், மூல மந்திர ஹோமமும் நடை பெற்றது.

கும்பாபிஷேக விழா இன்று காலை கோ பூஜையுடன் தொடங்கியது பின்னர் யாகத்தில் வைத்திருந்த புனித நீர் அடங்கிய கலசத்தை மங்கள வாத்தியத்துடன் ஊர்வலமாக கொண்டு சென்றனர்.

பின்னர் வேத மந்திரம் முழுங்க கோவில் கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். பின்னர் மஞ்சள் நீர் தெளிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து படவட்டம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய வழிபடுவோர் சங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News