மாநில சிலம்பாட்ட போட்டியில் சாதனை படைத்த கம்பம் மாணவர்கள்
- மாநில சிலம்பாட்ட போட்டியில் கம்பம் மாணவர்கள் முதல் 5 இடங்களை பெற்று சாதனை படைத்தனர்.
- சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வென்ற மாணவர்களுக்கு பாராட்டுவிழா நடைபெற்றது.
கம்பம்:
மாநில அளவிலான குழு போட்டியும், தனி சிலம்பாட்ட போட்டியும் மாணவர்களுக்கிடையே நடத்தப்பட்டது. இதில் கம்பம் ராணாஸ் லாடபதி பயிற்சி பட்டறை மற்றும் கூடலூரை சார்ந்த இரட்டைவால் அக்னி ஆகிய தற்காப்பு பயிற்சி பட்டறைகள் சார்பில் மாணவ, மாணவியர் கலந்து கொண்டு முதல் 5 இடங்களை பெற்று சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனர்.
இவர்களுக்கு பாராட்டு விழா கம்பத்தில் ராணா ஸ் லாடபதி பயிற்சி பட்டறையின் பயிற்சியாளர் செந்தில்குமார் தலைமையில் நடத்தப்பட்டது. கூடலூர் பயிற்சியாளர் திருமால் முன்னிலை வைத்தார். தேனி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ராமகிருஷ்ணன் எம். எல். ஏ. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பாலமுருகன் அனைவரையும் வரவேற்றார்.
கம்பம் நகர்மன்றத் துணைத் தலைவர் சுனோதா செல்வகுமார், தி.மு.க. தெற்கு நகர பொறுப்பாளர் சூர்யா செல்வகுமார் மற்றும் தேனீக்கள் மாற்றுத்திறனாளிகள் அறக்கட்டளையைச் சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.