உள்ளூர் செய்திகள்

மழையால் சேதமடைந்துள்ள நெற்பயிர்கள்.

தொடர் மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சேதம்

Published On 2022-09-04 10:10 GMT   |   Update On 2022-09-04 10:10 GMT
  • சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது.
  • சாகுபடி செய்த விவசாயிகள் கொள்முதல், குறைந்து விடுமோ என்ற கவலையில் உள்ளனர்.

திருவாரூர்:

நீடாமங்கலம் பகுதியில் குறுவை சாகுபடி செய்து அறுவடைக்கு தயிராக இருந்த நெல் மணிகள் மழையால் தரையில் சாய்ந்தது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டத்தில் 52 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளது. இதில் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது.

ராயபுரம், காளாஞ்சிமேடு, கடம்பூர், பரப்பனாமேடு, சித்தமல்லி மேல்பாதி, பூவனூர், அனுமந்தபுரம், பெரம்பூர், காளாச்சேரி, ராயபுரம், மேலபூவனூர், காணூர், அனுமந்தபுரம், தேவங்குடி, ரிஷியூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் நிலத்தடி நீரினை பயன்படுத்தி முன் கூட்டியே குறுவை சாகுபடிக்கு தொடங்கினர்.

இவ்வாறு முன்கூட்டியே சாகுபடி செய்த நெல் பயிர்கள் தற்போது அறுவடைக்கு வரும் நிலையில் நெல் மணிகள் பழுத்து வருகிறது. இந்நிலையில் நீடாமங்கலம் பகுதியில் இரவு நேரங்களில் பெய்து வரும் மழையால் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல்மணிகள் மழையில் தரையில் சாய்ந்துள்ளது. இதனால் சாகுபடி செய்த விவசாயிகள் கொள்முதல், குறைந்து விடுமோ என்ற கவலையில் உள்ளனர். வயல்களில் தேங்கிய மழை நீரை வடித்தெடுக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News