சின்னசேலம் அருகே சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் விபத்து அபாயம்
- தொட்டியிலிருந்து பங்காரம் வழியாக உலகம் காத்தான் செல்லும் சாலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.
- எச்சரிக்கை பலகை கூட அமைக்காமல் உள்ளதாக கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி :
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தொட்டியிலிருந்து பங்காரம் வழியாக உலகம் காத்தான் செல்லும் சாலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த சாலையில் ஓடை குறுக்கே செல்வதால் தண்ணீர் செல்வதற்கு வழி அமைத்து பாலம் அமைக்கப்பட்டு போக்குவரத்து செல்வதற்கு அமைக்கப்பட்டது. இந்தப் பள்ளம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பே ஏற்பட்டுள்ளது. ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை சரி செய்யாமல் உள்ளனர்.
இதனால் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் பெரிதும் சிரமப்பட்டுள்ளனர். எச்சரிக்கை பலகை கூட அமைக்காமல் உள்ளதாக கூறப்படுகிறது. பங்காரம் காட்டுக்கொட்டாய் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். காட்டுக்கொட்டாய் பகுதியில் இருந்து ஏராளமான மாணவர்கள் சைக்கிளில் அவ்வளியே பள்ளிக்கு சென்று வருகின்றனர். அப்படி செல்லும் பொழுது பள்ளத்தில் விழுந்தது விபத்து ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் பயணம் செல்லும் வாகனங்கள் பள்ளத்திலே விழுந்தால் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு அதிக அளவில் வாய்ப்பு உள்ளது. அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு கூட 108 ஆம்புலன்ஸ் அவழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் பள்ளத்தினால் உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்னதாகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்பது மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.