உள்ளூர் செய்திகள்

மண்சாலையை படத்தில் காணலாம்.

தடங்கம் நேதாஜி நகரில் குண்டும், குழியுமான மண்சாலையால் மக்கள் அவதி

Published On 2022-08-08 09:07 GMT   |   Update On 2022-08-08 09:07 GMT
  • நேதாஜி நகருக்கு செல்லும் சுமார் ஒரு கிலோ மீட்டர் சாலை 20 ஆண்டுகளாக மண் சாலையாகவே உள்ளது.
  • தார்சாலை அமைக்க வலியுறுத்தல்

நல்லம்பள்ளி,

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம்,தடங்கம் ஊராட்சிக்குட்பட்டது நேதாஜி நகர். இங்கு சுமார் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

சுமார் 25, ஆண்டுகளாக குடி இருந்து வருகின்றனர்.இங்கு குடியிருப்பவர்கள் ஊராட்சிக்கு வீட்டு வரியும் செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தடங்கம் மெயின்ரோட்டில் இருந்து நேதாஜி நகருக்கு செல்லும் சுமார் ஒரு கிலோ மீட்டர் சாலை 20 ஆண்டுகளாக மண் சாலையாகவே உள்ளது.

மழைகாலங்களில் குண்டும் குழியுமாக உள்ள மண் சாலையில் தண்ணீர் தேங்குவதால் பாதசாரிகள் நடக்க முடியாத சூழல் ஏற்படுகிறது.

மேலும் இருசக்கர வாகனத்தில் செல்வோர் சேறு,சகதியில் சிக்கிக்கொண்டு கீழே விழுந்து விடுகின்றனர்.

மண் சாலையை தார் சாலையாக மாற்ற வலியுறுத்தி ஊராட்சி நிர்வாகம் மற்றும் நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

எனவே மாவட்ட நிர்வாகம் இந்த மண் சாலையை தார்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News