உதிரி பாகங்கள் வாங்க ஒப்புதல் பெறுவதில் தாமதம் - பணிகளை முடிக்க முடியாமல் தவிக்கும் மின்வாரியம்
- உதிரி பாகங்கள் வாங்க ஒப்புதல் பெறுவதில் ஏற்படும் தாமதத்தால் உரிய நேரத்தில் பணிகளை செய்ய முடியாமல் மின்வாரியம் தவித்து வருகிறது.
- பல்லடம் மின் பகிர்மான வட்டத்தில் சுமார் 5 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன.
பல்லடம்:
பல்லடம், உதிரி பாகங்கள் வாங்க ஒப்புதல் பெறுவதில் ஏற்படும் தாமதத்தால் உரிய நேரத்தில் பணிகளை செய்ய முடியாமல் மின்வாரியம் தவித்து வருகிறது. இது குறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-பல்லடம் மின் பகிர்மான வட்டத்தில் சுமார் 5 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன.இந்த நிலையில் புதிதாக விண்ணப்பிக்கப்படும் மின் இணைப்புகள் மற்றும் ஏற்கனவே உள்ள இணைப்புகள், சேதமடைந்த கம்பங்கள், கம்பிகள் பொருத்துவது என மின்சார உதிரி பாகங்களின் தேவை அதிகம் உள்ளது. கடந்த வருடத்தில், மாவட்ட முதன்மை பொறியாளர் அலுவலகங்கள் மூலம் மின் உதிரிபாகங்கள், உபகரணங்களை நாங்கள் பெற்று வந்தோம்.தற்போது ஆட்சி மாற்றத்துக்குப் பின் மின் கம்பி முதல் மின் கம்பம் வரை அனைத்துக்கும் சென்னை தலைமை அலுவலகத்துக்கு விண்ணப்பித்து பெற வேண்டிய நிலை உள்ளதால், உரிய நேரத்தில் மின் உதிரிபாகங்கள், உபகரணங்களை பெற முடியாமலும்,மேற்கொண்டுள்ள பணிகளும் தாமதமாகின்றன.இது பொதுமக்கள் மத்தியில் மின்வாரியம் மீது அதிருப்தியை ஏற்படுத்துகிறது.எனவே கடந்த காலத்தில் இருந்தது போலவே,மாவட்ட முதன்மை பொறியாளர் அலுவலகங்களிலேயே மின் உதிரிபாகங்கள், உபகரணங்கள், கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.