வீட்டை இடித்தகூலிப்படையினர்4 பேர் கைது
கடலூர்:
பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சரவணன்,ராதா. இவர்கள் இருவரும் அண்ணன் தம்பிகள். ராதா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் அவரது மனைவி சுமதிதனது மகனுடன் அதே பகுதியில் வசித்துவந்தார்.சரவணனுக்கும் சுமதிக்குமிடையே வீட்டு மனை பிரச்சனை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் சரவணன் கடந்த 27-ந் தேதி நள்ளிரவில் தனது அடியாட்கள் 10-க்கும் மேற்பட்டோரை அனுப்பி தடி, கத்தி, கடப்பாறை, சுத்தி ஆகிய ஆயுதங்களை கொண்டு சுமதியின் வீட்டு சுவரை இடித்து சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சுமதி இது குறித்து பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்- இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும்போலீசார் சுமதி வீட்டில் பதிவாகி இருந்த சி.சி.டி.வி.காட்சிகளை வைத்துவீட்டினை இடித்து சேதப்படுத்திய மர்ம நபர்கள் 10-க்கும் மேற்பட்டோரை தேடி வந்தனர்.
இதற்கிடையில்கூலிப் படையாக செயல்பட்ட பண்ருட்டி போலீஸ் லைன் 3- வது தெரு ரவி மகன் கோகுல் (வயது 19) ,தேவராஜ் மகன்பாலாஜி என்ற அருண்பாலாஜி (வயது 26),ராதாகிருஷ்ணன்மகன் பாலாஜி (வயது 27),பாலமுருகன் மகன்மணிகண்டன் (வயது 20) ஆகி ய 4பேரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.