உள்ளூர் செய்திகள்

தமிழ்நாடு கள் மற்றும் பனையேறிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சையில், பனைமர கள் இறக்க அனுமதிக்க கோரி ஆர்ப்பாட்டம்

Published On 2023-01-21 09:49 GMT   |   Update On 2023-01-21 09:49 GMT
  • பனையேறிகள் மீது மதுவிலக்கு தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்வதை காவல்துறை கைவிட வேண்டும்.
  • தமிழகத்திலும் கள் உணவு பொருள் என்பதை கோடிட்டு பனைமர கள்ளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

தஞ்சாவூர்:

தமிழகத்தில் பனைமர கள் இறக்க அனுமதிக்க கோரி தமிழ்நாடு கள் மற்றும் பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இன்று தஞ்சை ரெயிலடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும், பதநீர் இறக்க உரிமை பெறும் நடைமுறைகளை எளிதாக்க வேண்டும்.

பனையேறிகள் மீது மதுவிலக்கு தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்வதை காவல்துறை கைவிட வேண்டும். கேரள மாநில அரசு போல் தமிழகத்திலும்கள் உணவு பொருள் என்பதை கோடிட்டு பனைமரக் கள்ளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News