உள்ளூர் செய்திகள்

திண்டுக்கல் மலைக்கோட்டையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

திண்டுக்கல்லில் அபிராமி அம்மனை பல்லக்கில் சுமந்தபடி பக்தர்கள் கிரிவலம்

Published On 2023-09-29 06:27 GMT   |   Update On 2023-09-29 06:27 GMT
  • ஒவ்வொரு மாத பவுர்ணமியன்று பத்மகிரீஸ்வரர்-அபிராமி அம்மனை பக்தர்கள் வேண்டி மலைக்கோ ட்டையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர்.
  • புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி பெண்கள் , வாலிபர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செய்தனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மலைக்கோ ட்டை உச்சியில் பழமை வாய்ந்த பத்மகிரீஸ்வரர்-அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சாமி சிலைகள் இல்லாததால் 2 நூற்றாண்டுகளுக்கு மேலாக வழிபாடுகள் நடைபெறுவது இல்லை. எனினும் ஒவ்வொரு மாத பவுர்ணமியன்று பத்மகிரீஸ்வரர்-அபிராமி அம்மனை பக்தர்கள் வேண்டி மலைக்கோ ட்டையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர்.

நேற்று புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி பெண்கள் , வாலிபர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செய்தனர். அவர்கள் பத்மகிரீஸ்வரர்- அபிராமி அம்மன் சிலைகளை பல்லக்கில் சுமந்தபடி பக்தி பாடல்களை பாடி கிரிவலம் சென்று வழிபாடு நடத்தினர்.

Tags:    

Similar News