உள்ளூர் செய்திகள்

சிவரத்திரி நாளில் பரவசம்: சேலத்தில் மலர்ந்த நாகலிங்க பூ- பக்தர்கள் தரிசனம்

Published On 2023-02-18 10:26 GMT   |   Update On 2023-02-18 10:26 GMT
  • நாகலிங்க பூவையே நாம் சிவலிங்கமாக எண்ணி வீட்டில் தினமும் பூஜிக்கலாம்.
  • மரத்தில் இன்று ஒரே பூவில் 2 மொட்டுக்கள் மலர்ந்துள்ளது.

சேலம்:

சிவ லிங்க பூஜைக்கு உதவக்கூடிய முக்கிய பொருட்களாக வில்வ இலை, தாமரைப்பூ, செவ்வரளிப் பூ வரிசையில் நாகலிங்கப் பூவுக்கும் முக்கிய இடம் வகிக்கிறது. நாகம் குடை பிடிக்க உள்ளே லிங்கம் இருக்கும் அதியற்புத வடிவில் நாகலிங்கப் புஷ்பம் பூக்கும். பூவுலகின் மகத்தானது. நாம் வாழும் காலத்திலேயே நாகலிங்க மரம் இன்றும் தென்படுவது, நாம் பெற்ற புண்ணியம் தான். தினசரி நாகலிங்க மர தரிசனமே நம் உள்ளுள் காலசக்தியையும், கால உணர்வையும் இயங்க வைப்பதாகும். நாகலிங்க புஷ்பத்தை ஆலயபூஜைக்கு அளித்தால் மிகப்பெரிய புண்ணிய காரியம் ஆகும். 3 கால பிரதோஷ வழிபாட்டுப் பலன்களை பல பிரதோஷ வழிபாட்டுப் பலன்களை ஒருங்கே தர வல்லதே இறைவனுக்கு நாகலிங்க பூவால் ஆற்றும் பூசனை.

நாகலிங்கப் பூவை வைத்து பூஜிப்பதின் முழுபலன்களையும் அடைய, பூஜிக்கப்படும் ஒவ்வொரு பூவிற்கும் ஒருவருக்கேனும் அன்னதானம் அளிக்க வேண்டும். நாகலிங்க மரம் இயற்கையான யோக அக்னியைப் பூண்டது. நாகலிங்கப் பூவை மரத்தில் இருந்து பறிக்கும்போது கைக்கு இதமான, உஷ்ணமாய் இருப்பதை உணர்ந்திடலாம் . ஒவ்வொரு நாகலிங்கப் பூவும் உள்சூட்டுடன் இருக்கும் இதுவே யோகபுஷ்ப தவச்சூடு ஆகும். இதன் ஸ்பரிசம் மனித மூளைக்கு மிகவும் நல்லது. ஒவ்வொரு நாகலிங்க பூவும் சூரிய, சந்திர கிரணங்களின் யோக சக்தியை கொண்டு மட்டுமே மலர்கின்றது.

நாகலிங்க பூவை வழங்கிய 21 ரிஷிகளை 'மாத்ருகா ரிஷிகள்' என்று அழைக்கப்படுகிறார்கள். நாகலிங்க பூவையே நாம் சிவலிங்கமாக எண்ணி வீட்டில் தினமும் பூஜிக்கலாம். நாகலிங்க பூவை வழிபாட்டால் நீண்ட கால தீராத நோய் தீரும். மன வேதனை குறையும்.

இத்தகைய அற்புத மலரான நாகலிங்க பூ சேலத்தில் மலர்ந்துள்ளது. சேலம் பெரம்மனூர் நாராயண பிள்ளை தெரு பகுதியில் ஒரு உள்ள வீட்டில் மிகவும் பழமையான நாகலிங்க மரம் உள்ளது. இந்த மரத்தில் இன்று ஒரே பூவில் 2 மொட்டுக்கள் மலர்ந்துள்ளது. சிவராத்திரி அன்று இந்த அதிசயப் பூ பூத்துள்ளதால் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். 

Tags:    

Similar News