உள்ளூர் செய்திகள்

சென்னிமலை முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

Published On 2023-01-01 09:37 GMT   |   Update On 2023-01-01 09:37 GMT
  • மார்கழி மாத விழா குழுவினர் சார்பில் சிறப்பு வழிபாடு அபிேஷகம் நடந்தது.
  • பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் பஸ்களை கூடுதல் முறை மலைகோவிலுக்கு இயக்கப்பட்டது.

சென்னிமலை:

2023-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சென்னிமலை முருகன் கோவிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு முதலில் கோமாதா பூஜை நடைபெற்றது.

பின்னர் மார்கழி மாத விழா குழுவினர் சார்பில் சிறப்பு வழிபாடு அபிேஷகம் நடந்தது. அதைத்தொடர்ந்து காலை 6.30 மணி முதல் மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் புத்தாண்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

அப்போது முருகப்பெருமான் மூலவர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

அதிகாலை முதல் திரளான பக்தர்கள் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் வந்ததால் மலை கோவிலில் மேல் வாகனங்கள் நிறுத்த இடம்பற்றாக்குறை ஏற்பட்டது.

பின்னர் கார்கள் நிறுத்தப்பட்டு 10 கார்கள் மட்டும் அனுமதிக்கபட்டு மீண்டும் 10 கார்கள் கீழே வந்தால் மேலும் 10 கார்களை அனுப்புவது என பணியாளர்கள் பெரும் சிரமப்பட்டனர்.

கோவில் வளாகத்தில் மிக அதிகமாக பக்தர்கள் கூட்டம் இருந்தது. சிறப்பு தரிசனத்தில் அரை மணி நேரமும், தர்ம தரிசனத்தில் ஒரு மணி நேரமும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை வழிபட்டனர்.

முருகன் சன்னதிக்கு பின்புறம் உள்ள வள்ளி, தெய்வானை, தன்னாசியப்பன், பின்னாக்கு சித்தர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் பஸ்களை கூடுதல் முறை மலைகோவிலுக்கு இயக்கப்பட்டது.

Tags:    

Similar News