கயத்தாறு அருகே அரசு பள்ளிக்கு ரூ.2 லட்சத்தில் டிஜிட்டல் போர்டு
- பணிக்கர்குளம் கிராமத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் நிதியிலிருந்து ஸ்மார்ட் டிஜிட்டல் போர்டு வழங்கப்பட்டு, திறப்பு விழா நடைபெற்றது.
- தொடர்ந்து கலையரங்கம் அமைய உள்ள இடத்தினை தேர்வு செய்யும் பணியினை ஊர் பொதுமக்கள் முன்பு பார்வையிட்டு இடம் தேர்வு செய்யப்பட்டது.
கயத்தாறு:
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி, கயத்தாறு யூனியன், பணிக்கர்குளம் கிராமத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் டிஜிட்டல் போர்டு வழங்கப்பட்டு, திறப்பு விழா நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ் செல்வி தலைமை தாங்கினார். இதில் கயத்தாறு தி.மு.க. மத்திய ஒன்றிய அவைத் தலைவர் துரைப்பாண்டியன், ஊராட்சி செயலாளர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து நாகலாபுரம் கிராமத்தில் மாவட்ட கவுன்சிலர் பிரியாகுருராஜ் நிதியில் இருந்து ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த கலையரங்கம் அமைய உள்ள இடத்தினை தேர்வு செய்யும் பணியினை ஊர் பொதுமக்கள் முன்பு பார்வையிட்டு இடம் தேர்வு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் நாகலாபுரம் நாட்டாமை காளிபாண்டியன், தி.மு.க. கிளை செயலாளர் சந்தனமாரி, பணிக்கர்குளம் பஞ்சாயத்து கிளார்க் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.