உள்ளூர் செய்திகள்
கலசம்பாடி அம்மன் கோவிலில் தீமிதி விழா
- சிறப்பு மலர் அலங்காரத்துடன் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளினார்.
- பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நாகப்பட்டினம்:
நாகை அருகே கலசம்பாடி நற்கூந்தலழகி அம்மன் கோவிலின் 19-ம் ஆண்டு வைகாசி தீமிதி திருவிழா கடந்த 21 ஆம் தேதி காப்புக் கட்டுதல் மற்றும் பூச்சொரிதலுடன் தெரடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நடைபெற்றது.
முன்னதாக அம்மன் மணி மண்டபத்திலிருந்து சிறப்பு மலர் அலங்காரத்துடன் மின் விளக்குகளால் அலங்க ரிக்கப்பட்ட வாக னத்தில் எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து காப்பு கட்டி விரதமிருந்த 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரா தனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.