உள்ளூர் செய்திகள்

விழுப்புரம் கலெக்டர் பழனி தலைமையில் இரு தரப்பினரிடையே பேச்சு வார்த்ைத நடைபெற்ற காட்சி.

கோவிலில் வழிபாடு தொடர்பாக கருத்து வேறுபாடு: இரு தரப்பினரிடம் கலெக்டர் பேச்சு வார்த்தை

Published On 2023-05-21 06:27 GMT   |   Update On 2023-05-21 06:27 GMT
  • பேச்சு வார்த்தையில் இரு தரப்பினரையும் அழைத்து சுமூக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
  • முடிவு எடுப்பதற்காக 3 நாட்கள் கால அவகாசம் கோரியுள்ளார்கள்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேல்பாதி கிராமத்தில் உள்ள தர்மராஜா  திரவுபதி அம்மன் கோவில் தொடர்பாக இரு தரப்பினரிடையே அமைதி பேச்சுவார்த்தை மாவட்ட கலெக்டர் பழனி தலைமையில் விழுப்புரம் தொகுதி எம்.பி. ரவிக்குமார், எம்.எல்.ஏ.க்கள்புகழேந்தி (விக்கிரவாண்டி) டாக்ட ர்லட்சுமணன்(விழுப்புரம்) சிவக்குமார்(மயிலம்) ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இது குறித்து மாவட்ட கலெக்டர் பழனி நிருபர்களிடம் கூறியதாவது:-

கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேல்பாதி கிராமத்தில் உள்ள தர்மராஜா -திரவுபதி அம்மன் க்கவில் வழிபாடு தொடர்பாக இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. எனவே, இது தொடர்பாக ஏற்கனவே இரண்டு கட்ட பேச்சுவார்த்தை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது. தற்போது மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தை நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னி லையில் நடைபெற்றது. பேச்சு வார்த்தையில் இரு தரப்பினரையும் அழைத்து சுமூக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இருதரப்பினரிடமும் கருத்து க்கள் கேட்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி, பொது இடத்தினை பயன்படுத்திட அனைவருக்கும் உரிமை உண்டு, அதேப்போல் சமூக நீதி கடைப்பிடித்தும் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டுவதும் சட்ட விதிகளில் ஒன்றாகும்.

பொதுவான ஊர் சம்மந்தப்பட்ட பிரச்சனை என்பதால், இரு தரப்பினரும் தங்கள் பிரச்சனைகளை எவ்வாறு சுமூகமாக தீர்வு காணலாம் என அரசு வழிகாட்டுதலின் படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பினரும் ஊர் பொதுமக்களிடம் கலந்து ஆலோசித்து சுமூக முடிவு எடுப்பதற்காக 3நாட்கள் கால அவகாசம் கோரியுள்ளார்கள். இப்பேச்சுவார்த்தையின் மூலம் சுமூக தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர்.ஜெயசந்திரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) மோகன்ராஜ், திண்டிவனம் சப்-கலெக்டர் க ட்டா ரவி தேஜா, விழுப்பு ரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்ச ந்திரன், கூடுத ல்போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தராஜ், ஸ்ரீதரன், மாவட்ட கலெக்டரின் நே ர்முக உதவியாளர்(பொது) ஹரிதாஸ், விழுப்புரம் தாசில்தார்வேல்முருகன், மேல்பாதி கிராமபொதுமக்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News