உள்ளூர் செய்திகள்

பெண் விவசாயிகளுக்கு கடனுதவிகளை துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

விவசாயிகளுக்கு ரூ.2.31 கோடி மதிப்பில் கடனுதவி வழங்கல்

Published On 2023-09-02 10:03 GMT   |   Update On 2023-09-02 10:03 GMT
  • கவ்டெசி தொண்டு நிறுவனத்தின் தலைவர் மாவடியான் வரவேற்று பேசினார்.
  • முடிவில் பாஸ்கர் நன்றி கூறினார்.

பூதலூர்:

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கருப்பூர் கவ்டெசி தொண்டு

நிறுவனத்தில் கல்யாணபுரம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தஞ்சாவூர் மாவட்ட தொழில் மையம், கருப்பூர் கவ்டெசி தொண்டு நிறுவனம் இணைந்து மகளிருக்கான கறவை மாடுகள் வாங்குவதற்கு கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது.

துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமை வகித்து கருப்பூர், கவ்டெசி தொண்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலுடன் செயல்பட்டு வரும் வினோபாஜி உழவர் உற்ப த்தியாளர் நிறுவனத்தைச் சார்ந்த

பெண் விவசாயிகள் 231 நபர்களுக்கு தஞ்சை மாவட்ட தொழில் மையம் மானிய உதவியுடனும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கல்யாணபுரம் கிளையின் வாயிலாக ரூ.2.31 கோடி மதிப்புள்ள கடனுதவிகளை வழங்கி பேசினார் .

நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மணிவண்ணன், தஞ்சை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதன்மை மண்டல மேலாளர் நாகேஸ்வரராவ், தஞ்சை மாவட்ட நபார்டு வங்கி உதவி பொதுமேலாளர் அனீஸ்குமார், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தஞ்சை மாவட்ட உதவி பொது செயலாளர் சக்கரவர்த்தி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மண்டல அலு வலக விவசாய அதிகாரி அஸ்வத்ராமன், விவசாய முதன்மை அதிகாரி பிரியதர்ஷினி, கல்யாணபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை முதன்மை மேலாளர் கற்பகவிநாயகம், சர்டோனிக்ஸ் கம்பெனியின் திட்ட அலுவலர் குலோத்துங்கன், இயக்குனர் கனி உள்ளிட்ட பலர் பேசினர்.

கவ்டெசி தொண்டு நிறுவனத்தின் தலைவர் மாவடியான் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியினை கவ்டெசி நிறுவன செயலாளர் கருணாமூர்த்தி தொகுத்து வழங்கினார்.

விழாவிற்கான ஏற்பாடு களை வங்கி அலுவலக பணியாளர்கள் மற்றும் கவ்டெசி நிறுவன பணியாளர்கள் கோமதி, சுபாஷினி, கனேஷ்வரி, ஆர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.

முடிவில் வினோபாஜி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் பாஸ்கர் நன்றி கூறினார்.

Tags:    

Similar News