உள்ளூர் செய்திகள்

விவசாயிகளுக்கு முழு மானியத்தில் தென்னங்கன்றுகள் விநியோகம் செய்யப்பட்ட போது எடுத்த படம்.

விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் விநியோகம்

Published On 2023-01-19 09:03 GMT   |   Update On 2023-01-19 09:03 GMT
  • கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 7 கிராம ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் முழு மானியத்தில் வழங்கப்படுகிறது.
  • முதற்கட்டமாக 1200 தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் வட்டார வேளாண்மை-உழவர் நலத்துறையின் மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ள வேட்டாம்பாடி, வீசாணம், தளிகை, கோனூர், பெரிய

கவுண்டம் பாளையம், சிலுவம்பட்டி, மாரப்ப நாயக்கன்பட்டி ஆகிய 7 கிராம ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் முழு மானியத்தில் வழங்கப்படுகிறது.

கிராம ஊராட்சிக்கு ஒரு பண்ணைக்குடும்பத்திற்கு தலா 2 தென்னங்கன்றுகள் வீதம் 300 பண்ணைக் குடும்பங்களுக்கு 600 தென்னங்கன்றுகள் வீதம் வழங்கப்பட்டவுள்ளது. முதற்கட்டமாக 1200 தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.

தென்னங்கன்றுகள் வழங்கும் முகாம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், வேட்டாம்பாடி கிராமத்தில் நடைபெற்றது. அதுசமயம் நாமக்கல் வட்டார அட்மா தலைவர் பழனிவேல் தலைமையில் வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா முன்னிலையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் விநியோகிக்கப்பட்டது. இம்முகாமினை வேளாண்மை அலுவலர் ரசிகபிரியா, உதவி வேளாண்மை அலுவலர் கோபிநாத், வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரமேஷ், உதவி தொழில்நுட்ப மேலாளர் கவிசங்கர் ஆகியோர் ஏற்பாடு செய்தி ருந்தனர்.

Tags:    

Similar News