உள்ளூர் செய்திகள்

விவசாயிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி

Published On 2023-02-23 09:43 GMT   |   Update On 2023-02-23 09:43 GMT
  • விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
  • தார்பாலின் உள்ளிட்டவை அடங்கிய பொருட்கள் 50 சதவீத மாணியத்தில் விவசாயி களுக்காக வழங்கப்பட்டது.

தொப்பூர்,

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் பாகலஹள்ளி ஊராட்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம் மூலம் பாகலஹள்ளி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் பண்ணை கருவிகள் மண்வெட்டி, கடப்பாரை பாண்டில், அரிவாள் மற்றும் தார்பாலின் உள்ளிட்டவை அடங்கிய பொருட்கள் 50 சதவீத மாணியத்தில் விவசாயி களுக்காக வழங்கப்பட்டது.

மேலும் 300 குடும்பங்களுக்கு தலா இரண்டு தென்னங்க ன்றுகளும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பி. வெங்கடேஸ்வரன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பண்ணை கருவிகளையும், தென்னங்கன்றுகளையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பாகலஹள்ளி ஊராட்சி மன்ற தலைவர் முருகன், நல்லம்பள்ளி ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் காமராஜ், வளர்மதி தமிழ்ச்செல்வன், வேளாண்மை உதவி இயக்குநர் இளங்கோவன், வேளாண்மை அலுவலர் இளங்கோவன், உதவி வேளாண்மை அலுவலர் கணேசன், மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News