மத்தூர் ஒன்றியத்தில் பொங்கல் தொகுப்பு வழங்கல்
- சர்க்கரை, ஒருமுழு கரும்பு ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார்.
- கண்ணுகானூர் குமார், செல்வம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியத்தில் மத்தூர், அத்திகானூர் ,கண்ணன்ட ஹள்ளி, நடுப்பட்டி, கருங்காலிப்பட்டி, சிவம்பட்டி, வாலிப்பட்டி, களர்பதி , பள்ளத்தூர் உள்ளிட்ட 14 ஊராட்சிகளில் தமிழக அரசு அறிவித்த இலவச பொங்கல் தொகுப்பினை மத்தூர் தி.மு.க வடக்கு ஒன்றிய செயலாளர் குணவசந்தரசு தலைமையில் ரூ.1000 , ம் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒருமுழு கரும்பு ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார்.
இந்நிழ்ச்சியில் மத்தூர் ஒன்றிய குழுத் தலைவர் விஜியலட்சுமி பெருமாள், ஒன்றிய துணைத் தலைவர் பர்வின்தாஜ் சலீம், ஒன்றிய துணை செயலாளர் ஜீவானந்தம், ஊராட்சி செயலாளர் கமலநாதன், முன்னாள் ஒன்றிய குழுத் துணைத் தலைவர் ராமமூர்த்தி, தலைமை குழு உறுப்பினர் செந்தில், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் எஸ்.எஸ்.சங்கர், மாவட்ட பிரதிநிதிகள் கோவிந்தராஜ், சாந்தமூர்த்தி ஒன்றிய இளைஞரணி பொருப்பாளர் சத்தியமூர்த்தி கண்ணன் டஹள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் சுப்பிரமணி, துணைத் தலைவர் மோகன் குமார், வாலிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பரந்தாமன், ஒட்டப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சந்தோஷ்குமார், பொம்மேப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் செந்தாமரை சுப்பிரமணி, சிவம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வி சரவணன், கண்ணடஹள்ளி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் டைகர் பாலு, வாலிப்பட்டி, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் சபிதா சேட்டு, கண்ணன் டஹள்ளி ஊராட்சி வார்டு உறுப்பினர் பெருமக்கள் முருகன், கட்சி நிர்வாகிகளான ஜெகதீசன், வேளாவள்ளி வீரமணி, கண்ணுகானூர் குமார், செல்வம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.