உள்ளூர் செய்திகள்

திருத்துறைப்பூண்டியில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

திருத்துறைப்பூண்டியில், 500 குடும்பங்களுக்கு மரக்கன்றுகள் வழங்கல்

Published On 2023-04-26 09:22 GMT   |   Update On 2023-04-26 09:22 GMT
  • உலக பூமி தினத்தை முன்னிட்டு மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி.
  • பருவநிலையை சமன்படுத்த மரங்களை நடுவதே சிறந்த தீர்வாகும்.

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டியில் உலக பூமி தினத்தை முன்னிட்டு மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் பிரதான் பாபு தலைமை தாங்கினார்.

பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.

நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் நகராட்சி பகுதியை சேர்ந்த 500 குடும்பங்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி பேசுகையில்:-

பிளாஸ்டிக் கழிவுகளாலும், தொழிற்சாலை கழிவுகளாலும், காடுகள் அழிப்பினாலும் பூமியில் மண், நீர், காற்று பாதிக்கப்படுகிறது.

இதனால் பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது.

எனவே, பருவநிலையை சமன்படுத்த மரங்களை நடுவதே சிறந்த தீர்வாகும் என்றார்.

இதில் நகர்மன்ற தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் கார்த்தி மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News