உள்ளூர் செய்திகள்

தருமபுரியில் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டம்: புத்தாடைகள் அணிந்து வாழ்த்து பரிமாறி மக்கள் உற்சாகம் -இறைச்சி கடைகளில் அலைமோதிய கூட்டம்

Published On 2022-10-25 09:39 GMT   |   Update On 2022-10-25 09:39 GMT
  • தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இந்தாண்டு உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
  • மீண்டும் பழைய உற்சாகத்துடன் மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

தருமபுரி,

கொரோனா பரவல், ஊரடங்கு என கடந்த 2 ஆண்டுகளாக களையிழந்து காணப்பட்ட தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இந்தாண்டு உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

மக்கள் அதிகாலை யிலேயே எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடைகள் அணிந்து ஒருவருக்கு ஒருவர் இனிப்புகளையும், வாழ்த்துகளையும் பரி மாறி உற்சாகமாக கொண்டா டினர். இதேபோல் தருமபுரி பகுதியில் அதி காலையிலேயே அதிரடி சரவெடியாக பட்டாசுகளையும் வெடித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தீபாவளி பண்டி கையை குதூகலமாக கொண்டாடினர்.நேற்று முன்தினம் விடிய விடிய தீபாவளி ஜவுளி வியாபாரம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதே போல் இறைச்சிக் கடைகளிலும் அதிகாலை முதலே கூட்டம் நிரம்பி வழிந்தது. தீபாவளியன்று காலை சிற்றூண்டியிலேயே மட்டன் இருக்க வேண்டும் என விரும்பும் பலரும் ஆட்டுக்கறி கடைகளில் அலைமோதி னர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் தீபாவளி பண்டிகை களை யிழந்து காணப்பட்ட நிலையில் இந்தாண்டும் மீண்டும் பழைய உற்சாகத்துடன் மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

Tags:    

Similar News