உள்ளூர் செய்திகள்

ரஹீம் தலைமையில் தி.மு.க. கவுன்சிலர்கள் நகராட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

செங்கோட்டை நகராட்சி கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க. வெளிநடப்பு

Published On 2022-11-09 08:24 GMT   |   Update On 2022-11-09 08:24 GMT
  • செங்கோட்டை நகர்மன்ற கூட்ட அரங்கில் புதிய சொத்துவரி உயர்வு தொடர்பான அவரசக் கூட்டம் நடந்தது
  • அ.தி.மு.க. கவுன்சிலர் ஜெகன் கூட்டத்திற்கான அஜன்டா தனக்கு காலதாமதமாக வந்ததை கண்டித்து வெளிநடப்பு செய்தார்

செங்கோட்டை:

செங்கோட்டை நகர்மன்ற கூட்ட அரங்கில் புதிய சொத்துவரி உயர்வு தொடர்பான அவரசக் கூட்டம் நடந்தது.

நகர்மன்ற தலைவா் ராமலெட்சுமி தலைமை தாங்கினார். துணைத்தலைவா் நவநீதகிருஷ்ணன், ஆணையாளா் பார்கவி, என்ஜினீயர் ஜெயப்ரியா, மேலாளா் ரத்தினம், சுகாதார அலுவலா் ராமச்சந்திரன், ஆய்வாளா் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர் ஜெகன் கூட்டத்திற்கான அஜன்டா தனக்கு காலதாமதமாக வந்ததை கண்டித்து வெளிநடப்பு செய்தார்.

அதனைதொடர்ந்து தி.மு.க. உறுப்பினா்கள் தங்களது வார்டு பகுதிகளில் உள்ள குறைகளை சரிவர தீர்க்காமலும், பாரபட்சமாக நடப்பதாகவும் கூறி ரஹீம் தலைமையில் இசக்கித்துரை பாண்டியன், மேரிஅந்தோணிராஜ், பினாஷா, சரவண கார்த்திகை, பேபிரெசவுபாத்திமா ஆகியோர் வெளிநடப்பு செய்தனா்.

பின்னா் தமிழக அரசின் புதிய சொத்துவரி உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, மின்கட்டண உயர்வு, பால்விலை உயர்வை கண்டித்து பா.ஜ.க. உறுப்பினா்கள் பொன்னுலிங்கம் என்ற சுதன், வேம்புராஜ், செண்பகராஜன், ராஜ்குமார் ஆகியோர் வெளிநடப்பு செய்தனா். அதனைதொடா்ந்து புதிய சொத்துவரி உயர்வு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினா்கள் சுடர்ஒளி ராமதாஸ், ராதா, சரஸ்வதி, சுகந்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News