கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கடலூரில் தி.மு.க. மகளிர் அணி பேரணி: அய்யப்பன் எம்.எல்.ஏ., லீமா அய்யப்பன் பங்கேற்பு
- டாக்டர் பிரவீன் அய்யப்பன் அனைவரையும் வரவேற்றார்.
- பெண்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
கடலூர்:
முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு தி.மு.க. திராவிட மாடல் அரசின் சாதனைகளின் முழக்கங்களுடன் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிரின் மாபெரும் எழுச்சி பேரணி கடலூர் தொகுதி எம்.எல்.ஏ. அய்யப்பன் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்றது. இப் பேரணிக்கு லீமா அய்யப்பன் தலைமை தாங்கினார். டாக்டர் பிரவீன் அய்யப்பன் அனைவரையும் வரவேற்றார்.
இப்பேரணி கடலூர் ஜவான்பவன் சாலையில் இருந்து தொடங்கப்பட்டு தமிழக அரசின் சாதனைகளை முழக்கங்களோடு அண்ணா மேம்பாலம், பாரதி சாலை வழியாக கடலூர் சுப்புராய ரெட்டியார் திருமண மண்டபத்தில் முடிவடைந்தது. மாநகராட்சி கவுன்சிலர்கள் கீதா குணசேகரன், சுமதி ரங்கநாதன், மகேஸ்வரி விஜயன், ராதிகா பிரேம்குமார், கீர்த்தனா ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பேரணியில் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் வி.எஸ்.எல். குணசேகரன், லட்சுமி செக்யூரிட்டி சர்வீஸ் கே.ஜி.எஸ் தினகரன், வக்கீல் சுந்தர், தொழிலதிபர் சித்ராலயா ரவிச்சந்திரன், கூட்டுறவு சங்க தலைவர்கள் ஆதி பெருமாள், ரவிச்சந்திரன், தொழிலதிபர் உமா சந்திரன், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர்,மாநகராட்சி கவுன்சிலர்கள் பிரகாஷ், தமிழரசன், சரத் தினகரன், பாருக் அலி, கர்ணன் மற்றும் நிர்வாகிகள் ஊராட்சி மன்ற தலைவர்கள் அனைத்து நிர்வாகிகள் மற்றும் பெண்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.