வானூர் அருகே கடை உரிமையாளரை கடத்திய தி.மு.க. நிர்வாகி மீது வழக்கு
- வேணு,பாஸ்கர் இருவரும் சேர்ந்து திண்டிவனத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.60 லட்சம் கடனாக வாங்கினர்.
- தி.மு.க. பிரமுகர் பாஸ்கரன், தேர்கு ணம் பாஸ்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் தனக்கு கொலை மிரட்டல் விடுவதாக வேணு குற்றஞ்சாட்டியுள்ளார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் தேர்குணம் பகுதியை சேர்ந்தவர் வேணு. வெல்டிங் கடை நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவர்கள் இருவரும் சேர்ந்து திண்டிவனத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வீட்டு பத்திரத்தை அடமான மாக வைத்து ரூ.60 லட்சம் கடனாக வாங்கினர். இதில் தேர்குணம் பகுதியைச் சேர்ந்த வேணு ரூ.15 லட்சத்தை மட்டும் திருப்பி கட்டியுள்ளார். மீதி தொகை யை கட்டுவதற்கு காலதாம தம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக பாஸ்கருக்கும், வேணுவுக்கும் இடையே பிரச்சனை நீடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து திருவக்கரை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், தி.மு.க. நிர்வாகியுமான பாஸ்கரன் என்பவர் மூலமாக வேணு விடம் பாஸ்கர் பேச்சு வார்த்தை நடத்தி பணத்தை கேட்டுள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தி.மு.க. நிர்வாகி பாஸ்கரன், தேர்குணத்தை சேர்ந்த பாஸ்கர் ஆகிய இருவரும் சேர்ந்து வேணுவை கடத்தினர். வானூர் அருகேயுள்ள காட்ராம்பாக்கத்தில் இருந்து கடத்தி, மாத்தூரில் உள்ள ஒரு வீட்டில் 3 நாட்கள் அடைத்து வைத்து பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். இது தொடர்பாக வேணு, வாட்ஸ்அப் மூலமாக அவரது மனைவிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து வேணுவின் மனைவி கிளியனூர் போலீஸ் நிலையம் சென்றார். தனது கணவரை கடத்தி சென்று மாத்தூரில் அடைத்து வைத்திருப்பதாகவும், அவரை மீட்டு தரவேண்டு மெனவும், வாட்ஸ்அப் தரவுகள் மூலம் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து கிளியனூர், கோட்டக்குப்பம் போலீசார் மாத்தூருக்கு விரைந்து சென்று வேணுவை மீட்டனர். மீட்கப்பட்ட வேணு, தன்னை தி.மு.க. நிர்வாகி பாஸ்கரன், தேர்குணம் பாஸ்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் மதி, நீல மேகம், செல்வம் ஆகியோர் கடத்தி சென்று சித்திரவதை செய்ததாக கிளியனூர் போலீசாரிடம் புகார் அளித்தார். இந்த புகார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், தலைமறைவாகியுள்ள அனைவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் தி.மு.க. பிரமுகர் பாஸ்கரன், தேர்கு ணம் பாஸ்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் தனக்கு கொலை மிரட்டல் விடுவதாக வேணு குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், அவர்களை கைது செய்ய வேண்டுமென கோட்டக்குப்பம் போலீஸ் துணை சூப்பிரண்டி டம் வேணு மனு கொடுத்துள் ளார். இந்த சம்பவம் கிளியனூர் மற்றும் வானூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.