உள்ளூர் செய்திகள்

 தி.மு.க. பிரமுகர் ஜெயக்குமார்.

வானூர் அருகே தி.மு.க. பிரமுகர் கொலை போலீசில் சிக்கிய 3 பேரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை

Published On 2022-08-11 07:01 GMT   |   Update On 2022-08-11 07:01 GMT
  • தி.மு.க. பொதுக்குழு உறுப்பினரான இவர் நேற்று காலை திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு பகுதிக்கு டீ குடிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் வந்தார்.
  • கும்பல் ஜெயக்குமாரை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி கொன்றது. இந்த சம்பவத்தால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

விழுப்புரம்: 

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள கோட்டக்கரை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 53). தி.மு.க. பொதுக்குழு உறுப்பினரான இவர் நேற்று காலை திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு பகுதிக்கு டீ குடிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது இரும்பை மகாகளேஸ்வரர் கோவில் அருகே சென்றபோது பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் வழிமறித்தது. உஷாரான ஜெயக்குமார் அங்கிருந்து தப்பி ஏரிக்கரை பகுதிக்கு ஓடினார். ஆனால் அந்த கும்பல் ஜெயக்குமாரை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி கொன்றது. இந்த சம்பவத்தால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு, கிளியனூர் சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் கோட்டக்கரையை சேர்ந்த குமரவேல், சந்துரு, சங்கர் மனைவி சரஸ்வதி, அவரது மகன் மனோஜ், குமரவேல் மனைவி சாந்தி, ஏழுமலை, புதுவை கருவடிகுப்பத்தை சேர்ந்த குமார் ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இந்த கொலை முன்விரோதத்தில் நடந்ததாக முதல் கட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சரஸ்வதி, மனோஜ், சாந்தி ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்துள்ளனர். அவர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள். மீதம் உள்ளவர்களை போலீசார் வலைவீசி தேடிவந்தனர். அப்போது அவர்கள் திண்டிவனம் பகுதியில் பதுங்கி இருப்பதாக சிக்னல் கிடைத்தது. அதன்படி போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.

Tags:    

Similar News