உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் உணவு பரிமாறியனார்.

தி.மு.க. சார்பில் வட மாநில தொழிலாளர்களுக்கு ஒருமைப்பாட்டு சமபந்தி விருந்து

Published On 2023-03-16 09:06 GMT   |   Update On 2023-03-16 09:06 GMT
  • மயிலாடுதுறை மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.
  • வட மாநில தொழிலாளர்களை அமர வைத்து ஒருமைப்பாட்டை மேம்படுத்து வகையில் திமுக சார்பில் சமபந்தி உணவு பரிமாறினர்.

தரங்கம்பாடி:

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுவதாக எழுந்த புரளியைத் தொடர்ந்து, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பல்வேறு மாவட்டங்களில் வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் குடும்ப குடும்பமாக வசித்து வருகின்றனர்.

அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் திமுக சார்பில் வட மாநில தொழிலாளர்களுக்கு ஒருமைப்பாட்டு சமபந்தி நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் வட மாநில தொழிலாளர்களுக்கு மாலை போட்டு சால்வை அணிவித்து கௌரவித்தார்.

தொடர்ந்து வட மாநில தொழிலாளர்களை அமர வைத்து ஒருமைப்பாட்டு சமபந்தி விருந்தாக ஒருமைப்பாட்டை மேம்படுத்து வகையில் திமுக சார்பில் சமபந்தி உணவு பரிமாறினர்.

இதில் மாவட்ட துணைச் செயலாளர் செல்வமணி, நகர செயலாளர் குண்டுமணி, திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News