2 ஆண்டுகளில் கோவைக்கு தி.மு.க. எந்த திட்டங்களையும் தரவில்லை-முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணி குற்றச்சாட்டு
- அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்களையும் விரைவாக முடிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள்
- எந்த பணிகளையும் செய்யாமல் திமுக அரசு மக்களை வஞ்சித்து வருகிறது.
கோவை,
கோவை புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தொண்டாமுத்தூர் தொகுதி கோவைப்புதூரில், அ.தி.மு.க. துணை செயலாளரும், மாநகராட்சி கவுன்சிலருமான டி.ரமேஷ் ஏற்பாட்டில் நீர் மோர்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்பி. வேலுமணி எம்.எல்.ஏ., திறந்து வைத்து பொது மக்களுக்கு இளநீர், தர்பூசணி மற்றும் நீர்மோர் வழங்கினார்.
விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசிய தாவது:-
அ.தி.மு.க ஆட்சி காலத்தில் கோவை மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியதை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விடமாட்டார்கள்.
ஆனால் விடியா தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற இந்த 2 ஆண்டு காலங்களில் எந்த திட்டங்களையும் தரவில்லை.
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்களையும் விரைவாக முடிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள்.
கோவையை பொறுத்த வரை அதிமுக ஆட்சி காலத்தில் பாலங்கள், சாலைகள் அனைத்தும் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வந்தது.
தற்பொழுது எந்த பணிகளையும் செய்யாமல் திமுக அரசு மக்களை வஞ்சித்து வருகிறது. சாலைகள் பொதுமக்கள் பயணம் செய்ய முடியாத வகையில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.
இதை கண்டித்து மாபெரும் உண்ணாவிரத போராட்டம் கூட இருந்து விட்டோம். பல போராட்டங்களையும் ஆர்ப் பாட்டங்களையும் நடத்தி விட்டோம்.
தற்பொழுது கோவைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி யானது போதுமானதாக இல்லை. இந்த அரசு இதையெல்லாம் கவனத்தில் கொண்டு மக்களுக்கு சேவையாற்றிட வேண்டும்.
இனியாவது இந்த திமுக அரசு விழித்துக் கொண்டு மக்களின் அடிப்படை பிரச்சினைகளை பாகுபாடு பார்க்காமல் நிறைவேற்ற வேண்டும்.
ஒட்டுமொத்தமாக தமிழகமெங்கும் இன்றைய தி.மு.க அரசின் மீது மக்கள் வெறுப்பாக உள்ளனர். இப்போது தேர்தல் வைத்தாலும் அ.தி.மு.க மாபெரும் வெற்றி பெறும். மக்களை புரிந்த எடப்பா டியார் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதில் சுண்டக்காமுத்தூர் பகுதி செயலாளர் வி.குலசேகரன், குனிய முத்தூர் பகுதி செயலாளர் மதனகோபால், பகுதி தலைவர் கே.ஆர். செல்வராஜ், வட்ட கழக செயலாளர்கள் தமிழரசி கே. சுப்பிரமணியன், சி.ஜனார்த்தனன், எஸ்டி.கதிரேசன், பிரகாஷ், எஸ்.சி. செல்வராஜ் மற்றும் வட்ட கழக துணை செயலாளர் பி.நித்தி யானந்தம், நிர்வா கிகள் ஓம் சக்தி தேவராஜ், ஜெயபால், ராஜசேகர், வடிவேல், ஜீவானந்தம், குமார், ஆவின் மண்டல செயலாளர் ஆவின் எஸ்.முருகன், அம்மா பேரவை பகுதி செயலாளர் ஜி.எம்.செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.