திருக்கோவிலூர் அருகே பொதுமக்களை கடித்து குதறிய நாய்கள்
- சுமார் 10-க்கும் மேற்பட்ட பொதுமக்களை நாய் கடித்ததால் அருகில் உள்ள அரசு மருத்து வமனையில் சிகிச்சை பெற்றனர்.
- செல்லப்பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம் தொடங்கியது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கோளப்பாறை கிராமத்தில் நேற்று தெருவில் சுற்றித் திரிந்த சில நாய்கள் திடீரென பொதுமக்களை கடித்துக் குதற ஆரம்பித்தது. சுமார் 10-க்கும் மேற்பட்ட பொதுமக்களை நாய் கடித்ததால் அருகில் உள்ள அரசு மருத்து வமனையில் சிகிச்சை பெற்றனர். அதனைத் தொடர்ந்து திருக்கோவிலூர் கோட்ட கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் டாக்டர் சுகுமார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக கோளப்பாறை கிராமத்தில் செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி போடும் முகாமை ஏற்பாடு செய்தார். அதன்படி கோளப்பாறை கிராமத்தில் உள்ள ஊராட்சி அலுவலகம் அருகில் வெறி நோய் விழிப்புணர்வு மற்றும் செல்லப்பி ராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம் தொடங்கியது.
கால்நடை உதவி இயக்குனர் டாக்டர் சுகுமார் தலைமையில் டாக்டர் மகேஸ்ராம், டாக்டர் ஆலமரத்தான் மற்றும் குழுவினர் கிராமத்தில் சுற்றித்திரிந்த மற்றும் பொதுமக்கள் வீட்டில் வளர்த்து வந்த செல்லப்பிராணிகளுக்கும் தெரு நாய்களுக்கும் வெறி நோய் தடுப்பூசி போட்டனர் . அத்துடன் கோளப்பாறை கிராம பொதுமக்களுக்கு வெறிநோய் அறிகுறிகள், தடுப்பூசியின் அவசியம் ,மற்றும் நோய் தடுப்பு முறைகள் பற்றி விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது. முகாமில் கலந்து கொண்ட டாக்டர்களுக்கும் கால்நடை பராமரிப்புத் துறை யினருக்கும் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் நன்றி கூறினார். மேலும் விழுப்புரம் கா ல்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் ராஜேந்திரனின் அறிவுரைப்படி கோள ப்பாறை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் கால்நடை உதவி டாக்டர்கள் தலைமை யில் குழுக்கள் அமைத்து தினசரி தொடர் கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.