உள்ளூர் செய்திகள்

பரமத்திவேலூர் சந்தையில் நாட்டுக்கோழி விலை சரிவு

Published On 2023-05-01 09:55 GMT   |   Update On 2023-05-01 09:55 GMT
  • வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை நாட்டுக் கோழி சந்தை கூடுகிறது.
  • கடந்த வாரம், ஒரு கிலோ நாட்டுக் கோழி, 350 ரூபாய்க்கு விற்பனையானது.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், சுல்தான் பேட்டை, மோகனூர் பிரிவு சாலையில், வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை நாட்டுக் கோழி சந்தை கூடுகிறது.

இங்கு விற்பனைக்கு வரும் நாட்டுக்கோழிகளை வியாபாரிகள் பலரும் போட்டி போட்டி வாங்கிச் செல்வர். கடந்த வாரத்தைவிட இந்த வாரம், கோழிகள் வரத்து அதிகரித்ததால், அதன் விலை சரிந்தது. கடந்த வாரம், ஒரு கிலோ நாட்டுக் கோழி, 350 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால், நேற்று 280 ரூபாய்க்கு விற்பனையானது.

பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருவதால் பொதுமக்கள் அசைவம் சாப்பிட மாட்டார்கள். மேலும் வெயில் காலத்தில் நாட்டுக்கோழியை சமைத்து சாப்பிட்டால், உடல் சூட்டை அதிகரித்துவிடும் என்பதால், கோடைகாலத்தில் அவற்றை தவிர்க்கின்றனர்.

ஒரு சில வியாபாரிகள், பண்ணைக் கோழிகளை நாட்டுக்கோழி என ஏமாற்றி விற்பனை செய்து வருகின்றனர். இதுபோன்ற காரணங்களால் வாடிக்கையாளர்கள் குறைந்துள்ளனர் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News