கோவில்பட்டி ராகவேந்திரா அறக்கட்டளை சார்பில் அன்னதானம்
- கோவில்பட்டி வேலாயுதபுரம் பத்ரகாளியம்மன், காளியம்மன் கோவிலில் அன்னதானம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
- கே.என்.சுப்புராஜ் நினைவு கல்வியியல் கல்லூரி செயலாளர் மற்றும் தொழிலதிபர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி ராக வேந்திரா அறக்கட்டளை சார்பில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கோவில்களில் அன்னதானம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
இதில் 10-வது மாத நிகழ்ச்சியாக கோவில்பட்டி வேலாயுதபுரம் பத்ரகாளியம்மன், காளியம்மன் கோவிலில் அன்னதானம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கே.என்.சுப்புராஜ் நினைவு கல்வியியல் கல்லூரி செயலாளர் மற்றும் தொழிலதிபர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.
நகர கூட்டுறவு வங்கி இயக்குனர் லவராஜா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக அருண் பேக்கரி உரிமையாளர் மாடசாமி, வேல் விநாயகா டிரேடர்ஸ் உரிமையாளர் ஜெயபால், ஜீவ அனுக்கிரக பொதுநல அறக்கட்டளை நிறுவனர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அன்னதான நிகழ்ச்சியை கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழியபாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன், தலைவர் ஜெயக்கொடி, செயலாளர் ஜோதி காமாட்சி, பொருளாளர் கார்த்திகேயன், தொழிலதிபர்கள் அசோக், தனபால், சேகர், மாடசாமி, ரவிக்குமார மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் நடராஜன், பாலமுருகன், சண்முகசுந்தரம், கதிரேசன், மாரிமுத்து, செல்வம், தங்கராஜ், சுப்பிரமணியன், முத்துமாரியம்மன், பொன்னு பாண்டி, காளிராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். முருகன் நன்றி கூறினார்.