வரதட்சணை கொடுமை: மனைவியை வீட்டை விட்டு விரட்டி 2-வது திருமணத்துக்கு முயன்ற கணவர்
- வரதட்சணையாக 50 பவுன் நகையுடன் வந்தால்தான் வாழ முடியும் என கூறி கணவர் மனைவியை கொடுமைப்படுத்தி 2-வது திருமணத்திற்கு முயன்றுள்ளார்.
- இதுகுறித்த புகாரின்பேரில் 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேவதானப்பட்டி:
பெரியகுளம், வடகரை பூந்தோட்டத் தெருவைச் சேர்ந்தவர் திவ்யா (வயது 28). இவருக்கும் புல்லக்கா பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த கதிரேசன் என்பவ ருக்கும் கடந்த 2020ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. திருமணத்தின் போது 20 பவுன் நகை மற்றும் சீர் வரிசைகள் வரதட்சணை யாக கொடுக்கப்பட்டது.
கணவர் டிரைவர் வேலைக்கு சென்ற போது மாமனாரான முருகன் என்பவர் திவ்யாவின் அறைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். இது குறித்து அவர் கணவர் மற்றும் மாமியாரிடம் கூறிய போது அவர்கள் கண்டு கொள்ளவில்லை.
இந்நிலையில் கடந்த தீபாவளி சமயத்தில் திவ்யா மற்றும் குழந்தையை அவரது பெற்றோர் வீட்டில் விட்டு விட்டு கதிரேசன் வந்து விட்டார். அப்போது மீண்டும் வீட்டுக்கு வரும் போது 50 பவுன் நகையுடன் வந்தால்தான் வாழ முடியும் என கூறியுள்ளார்.
மேலும் வேறு ஒரு பெண்ணை 2-வது திரு மணம் செய்ய முயன்று ள்ளார். இது குறித்து பெரியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலை யத்தில் புகார் அளிக்கப்ப ட்டது. போலீசார் கணவர் மற்றும் அவரது குடும்பத்தை எச்சரித்து சேர்ந்து வாழுமாறு கூறியுள்ளனர். அதன்படி மீண்டும் தனது மனைவி மற்றும் குழந்தையை வீட்டுக்கு அழைத்து வந்தனர்.
சில மாதங்கள் கழித்து மீண்டும் திவ்யாவிடம் 50 பவுன் நகை வாங்கி வரச்சொல்லி அடித்து கொடுமைபடுத்தி வீட்டை விட்டு விரட்டி விட்டனர். இது குறித்து மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் திவ்யா புகார் அளித்தார்.
எஸ்.பி. உத்தரவின் பேரில் பெரியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னமயில் வரதட்சணை கொடுமை படுத்திய கணவர் கதிரேசன், மாமனார் முருகன், மாமியார் அம்சராணி மற்றும் சந்துரு, சுமதி ஆகிய 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.