உள்ளூர் செய்திகள்

கல்லணை தோகூர் பஸ் நிலையம் அருகே உள்ள வடிகால் பாலம் சீரமைப்பு பணிகள் நடந்தது.

கல்லணையில் வடிகால் பாலம் சீரமைப்பு பணிகள் தீவிரம்

Published On 2023-05-14 09:29 GMT   |   Update On 2023-05-14 09:29 GMT
  • இரும்பு ஷட்டர்கள் புதிதாக பொருத்தப்பட்டு அதன் மேலே உள்ள ஏற்றி இறக்கும் இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.
  • பாதுகாப்பாக குளிப்பதற்கு ஏற்ற வகையில் தொட்டி போன்ற அமைப்பு புதிதாக கட்டப்பட்டு வருகிறது.

 தஞ்சாவூர்:

 கல்லணையில் உள்ள காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் மற்றும் பாலங்களில் பல்வேறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கொள்ளிடம் ஆற்றில் இரும்பு ஷட்டர்கள் புதிதாக பொருத்தப்பட்டு அதன் மேலே உள்ள ஏற்றி இறக்கும் இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன .

அதேபோல காவிரி,வெண்ணாறு, கல்லணை கால்வாய்களில் மின்மயமாக்கப்பட்ட ஏற்றி இறக்கும் கருவிகள் சீரமை க்கும் பணி நடைபெற்று வருகிறது.

காவிரி ஆற்றில் சிறுவர் பூங்கா அருகில் தண்ணீர் காவிரியில் திறந்து விடப்படும் சமயங்களில் பாதுகாப்பாக குளிப்பதற்கு ஏற்ற வகையில் தொட்டி போன்ற அமைப்பு புதிதாக கட்டப்பட்டு வருகிறது.

காவிரி ஆற்றின் உள்பகுதியில் நீரோட்டத்தை சீரமைக்கும் வகையில் தடுப்பு அமைப்புகள் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

தோகூர்பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள வடிகால் பாலத்தை அதன் மேற்பகுதியில் உள்ள சிமெண்ட் கான்கிரீட்டுகளை அகற்றி சீரமைக்கும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

நடைபெற்று வரும் பணிகளை நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் இளங்கோ, உதவி செயற்பொறியாளர் சிவக்குமார், ஆகியோர் பார்வையிட்டனர்.

உதவி பொறியாளர்கள் திருமாறன், அன்பு செல்வன் ஆகியோர் செய்யப்படும் பணிகள் குறித்து விளக்கி கூறினர்.

Tags:    

Similar News