உள்ளூர் செய்திகள் (District)

வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தபோது எடுத்த படம்.

தூத்துக்குடி மாநகரில் வடிகால் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்- மேயர் ஜெகன் பெரியசாமி உத்தரவு

Published On 2023-01-04 09:04 GMT   |   Update On 2023-01-04 09:04 GMT
  • 60 வார்டுகளிலும் ஒரே சீரான வளர்ச்சி ஏற்படுத்தப்படும் என்று மாநகராட்சி கூட்டங்களின் மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
  • மாநகரில் நடைபெற்று வரும் சாலை பணிகள் உள்ளிட்டவற்றை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பெரியசாமி பொறுப்பேற்று ஓராண்டை நெருங்கி வரு கிறது. இந்நிலையில் மாநகரில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சி திட்ட பணிகளை அவர் இரவு பகலமாக நேரடியாக சென்று பார்வையிட்டு பணிகளை விரைவுப்படுத்தி வருகிறார்,

முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றிடும் வகையிலும் தமிழகத்தின் முன்மாதிரி மாநகராட்சியாக திகழ்ந்திடும் வகையிலும் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன,இதற்காக மாநகரில் உள்ள 4 மண்டலங்கள் 60 வார்டுகளிலும் ஒரே சீரான வளர்ச்சி ஏற்படுத்தப்படும் என்று மாநகராட்சி கூட்டங்களின் மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.

அதன்படி மாநகரில் குடிநீர் தேவை கள், சுற்றுச்சூழல் மேம்பாடு, புதிய சாலைகள் அமைத்தல், போக்குவரத்துகள் சீரமைப்பு, வடிகால்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள் உள்ளிட்ட திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த பணிகளை அவர் இரவு பகலாக ஆய்வு செய்து வருகிறார்.

இந்நிலையில் மாநகரில் நடைபெற்று வரும் சாலை பணிகள்,வணிக வளாக கட்டிட பணிகள் பழைய பேருந்து நிலைய பணிகள் ஆகியவற்றை தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார். இந்நிலையில் நேற்று இரவு தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட எஸ்.எஸ்.மாணிக்கபுரம் சந்திப்பு, பசும் பொன் நகர் மற்றும் நான்காம் கேட்டில் இருந்துவி.எம்.எஸ். நகர் சாலை ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் புதிய வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை சிறப்பாகவும் விரைவாகவும் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

ஆய்வின் போது மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ் பிரபாகரன், ஜாஸ்பர், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவ லர்கள் உடன் இருந்ததனர்.

Tags:    

Similar News