கடந்த 6 மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை
- கீரைப்பட்டி ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரி வித்தும் நடவடிக்கை இல்லை.
- ஆத்திரமடைந்த கிராம மக்கள் அரூர்-சித்தேரி சாலையில், தாதராவலசை என்னும் இடத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரூர்,
தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள கீரைப்பட்டி ஊராட்சியில் தாதராவலசை மற்றும் புதூர் ஆகிய கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இந்த நிலையில், இங்குள்ள கிராமங்களில் கடந்த 6 மாதங்களாக போதுமான குடிநீர் விநியோகம் இல்லை.
இதனால், கிராம மக்கள் அருகில் உள்ள விவசாய கிணறுகளில் இருந்து குடிநீரை எடுத்து பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து கீரைப்பட்டி ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரி வித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அரூர்-சித்தேரி சாலையில், தாதராவலசை என்னும் இடத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த அரசு அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் பிரச்சனையை தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் அளித்த உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.
இந்த சாலை மறியல் காரணமாக அரூர் - சித்தேரி சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.