உள்ளூர் செய்திகள்
திண்டிவனத்தில் குடிநீர் குழாய் உடைந்து வீணான நீர்
- மூடப்படாத பள்ளத்தில் வாகனங்கள் விபத்தில் சிக்குவது தொடர்கதையாக இருந்து வந்தது.
- நகராட்சியிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சியில் பாதாள சாக்கடை பணி கடந்த ஒரு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பாதாள சாக்கடை பணியின் போது பல்வேறு இடங்களில் சரிவர மூடப்படாத பள்ளத்தில் வாகனங்கள் விபத்தில் சிக்குவது தொடர்கதையாக இருந்து வந்தது. மேலும் பல்வேறு இடங்களில் பள்ளத்தில் வாகனங்கள் விழுந்து குடிநீர் குழாயும் அவ்வப்போது உடைந்து தண்ணீர் வீணாவது தொடர் கதையாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று திண்டிவனம் கிடங்கல் 2 பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக போடப்பட்ட பாதாள சாக்கடை பள்ளம் திடீரென உள் வாங்கி அதிலிருந்து குழாய் உடைந்து குடிநீரானது வீணாக ரோட்டில் ஆறு போல் ஓடியது. இது குறித்து நகராட்சியிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த பொது பகுதி பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.