உள்ளூர் செய்திகள்

கபிலர்மலை பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் போலீஸ் டி.எஸ்.பி கலையரசன், கபிலர்மலை ஒன்றிய செயலாளர் சண்முகம் மற்றும் விழா குழுவினர் ஆய்வு செய்தபோது எடுத்த படம். 

கபிலர்மலை பாலசுப்பிரமணிய சாமி கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகளை டி.எஸ்.பி ஆய்வு

Published On 2023-02-04 09:14 GMT   |   Update On 2023-02-04 09:14 GMT
  • பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலையில் உள்ள பாலசுப்பிரமணிய சாமி கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு தேர் திருவிழா நாளை நடைபெறுகிறது.
  • சப்- இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர், கபிலர்மலை ஒன்றிய செயலாளர் சண்முகம், விழா குழு தலைவர் ராமலிங்கம் மற்றும் விழா குழு உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலையில் உள்ள பாலசுப்பிரமணிய சாமி கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு தேர் திருவிழா நாளை நடைபெறுகிறது.

ஒவ்வொரு வருடமும் தைப்பூசத்தன்று நாமக்கல் மாவட்டம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி, இளநீர் காவடி, மயில் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகளை அங்கிருந்து கபிலர்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் கிரிவலப்பாதை வழியாக நடந்து சென்று, மலை உச்சியில் உள்ள பாலசுப்ரமணிய சாமிக்கு அபிஷேக ஆராதனை செய்வது வழக்கம்.

அதேபோல் நாளையும், பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் பல்வேறு காவடிகளை எடுத்து

வந்து சாமி தரிசனம் செய்வார்கள். மாலை 4 மணி

அளவில், முதல் நாள் தேரோட்டம் நடைபெற உள்ளது. மறுநாள் (திங்கட்கி ழமை) 2-ம் நாள் தேரோட்டமும் நடைபெறுகிறது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய உள்ளனர். மேலும் கிரிவலப் பாதையை சுற்றி பல்வேறு வகையான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் போடப்பட்டு உள்ளன.

விழாவை முன்னிட்டு கோவிலில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா என்பது குறித்தும், தேர் சென்று வரக்கூடிய பாதை, பக்தர்கள் செல்லும் பாதைகளில் பரமத்தி வேலூர் போலீஸ் டி.எஸ்.பி கலையரசன், போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர், கபிலர்மலை ஒன்றிய செயலாளர் சண்முகம், விழா குழு தலைவர் ராமலிங்கம் மற்றும் விழா குழு உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர்.

தேரோட்டத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் வகையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட உள்ளனர்.

Tags:    

Similar News