கண்டமங்கலம் அருகே தந்தை-மகளை உயிர்ப்பலி வாங்கிய டிப்பர் லாரிைய மடக்கிய டி.எஸ்.பி.
- கண்டமங்கலம் அருகே தந்தை-மகளை உயிர்ப்பலி வாங்கிய டிப்பர் லாரிைய டி.எஸ்.பி. பார்த்திபன் மடக்கி பிடித்தார்.
- இளைஞர்களும், பொதுமக்களும் நேரில் வந்து வாழ்த்து கூறினர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே கொடுக்கூர் கிராமத்தைச் சேர்ந்த நீலமேகம், அவரது மகள் ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சென்ற போது அடையாளம் தெரியாத ஒரு டிப்பர் லாரி மோதி உயிரிழந்தனர். அப்போது, விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரியைப் பிடித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அக்கிராம பொதுமக்கள், இளைஞர்கள் இறந்தவர் உடல்களை போலீசார் மீட்க விடாமல் தடுத்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை அறிந்த விழுப்புரம் போலீஸ் டி.எஸ்.பி பார்த்திபன் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடமும், கிராம இளைஞர்களிடமும் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, அவர் பேசிய விதமும், அவர் அளித்த உத்த ரவாதமும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அதன்பின், இறந்தவர் உடல்களை போலீசார் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, 24 மணி நேரத்தில் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை பிடித்து விழுப்புரம் போலீஸ் டி.எஸ்.பி. பார்த்திபன் நடவடிக்கை எடுத்துள்ளார். இதையடுத்து, வெளிப்படையான முறையிலும்,அதே நேரத்தில் தனது சாதுரியதனத்தால் விசாரணை நடத்தி, விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை கண்டுபிடித்து, உரிய நடவடிக்கை எடுத்த டி.எஸ்.பி. பார்த்திபனுக்கு, கேணிப்பட்டு-திருவக்கரை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களும், பொதுமக்களும் நேரில் வந்து வாழ்த்து கூறினர். மேலும் இதற்கு முத்தாய்ப்பு வைத்தது போல் வாட்ஸ் அப்பில் டி.எஸ்.பி. க்கு சல்யூட் என்று குறுஞ்செய்தி அனுப்பி வைத்து பெருமை சேர்த்துவருகின்றனர்.