உள்ளூர் செய்திகள்
காற்றின் வேகத்தால் அமராவதி அணையில் மீன்பிடி தொழில் பாதிப்பு
- ஆண்டுதோறும் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யப்பட்டு வளர்க்கப்படுகிறது.
- காற்றின் வேகம் குறைந்தால் மீண்டும் மீன் பிடி தொழில் தீவிரமடையும்.
உடுமலை,
உடுமலை அமராவதி அணையில் மீன் வளர்ச்சி கழகம் சார்பில் ஆண்டுதோறும் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யப்பட்டு வளர்க்கப்படுகிறது. குறிப்பாக, கட்லா, ரோகு, மிர்கால், திலேப்பியா ரக மீன்களே அணைகளில்வ ளர்ப்புக்கு தேர்வு செய்யப்படுகின்றன.வழக்கமாக கோடை காலத்தில்அணை நீர்மட்டம் குறைந்து மீன் பிடிபடுவது அதிகரிக்கும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கோடை காலத்தில் பெய்த மழை காரணமாக அணை நீர்மட்டம், குறையவில்லை.மேலும் பலத்த காற்று காரணமாக, பரிசல் இயக்க சிரமம் ஏற்படுவதுடன் விரிக்கும் வலை இழுத்து செல்லுதல் உள்ளிட்ட காரணங்களால் மீன்பிடி குறைந்துள்ளது. பருவமழை சீசன் துவங்கும் முன், காற்றின் வேகம் குறைந்தால் மீண்டும் மீன் பிடி தொழில் தீவிரமடையும் என எதிர்பார்க்கின்றனர்.