வணிகர்களின் நிலுவை தொகை ரத்து: முதலமைச்சருக்கு மணலி சேக்காடு வணிகர் சங்கம் பாராட்டு
- கூட்டத்தில் சங்க பொது செயலாளர் மணலி என். மாரிமுத்து தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- கூட்டத்தில் மணலி தலைவர் பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மணலி வணிகர் சங்க ஆலோசனை கூட்டம் சங்க அலுவலகத்தில் சங்க நிதி குழு தலைவர் சந்தனா என். சேகர் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு வடசென்னை வடக்கு மாவட்ட பொருளாளர் ராஜா சங்கர், நிதிக்குழு செயலாளர் சமுத்திர பாண்டியன், பொருளாளர் எஸ். எஸ். காட்வின், செயலாளர்கள் கருணாமூர்த்தி, ராஜேஷ், வேதா, துணை தலைவர் ராதாகிருஷ்ணன், முத்தையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சங்க பொது செயலாளர் மணலி என். மாரிமுத்து தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் ஏ. எம். விக்ரம ராஜாவின் கோரிக்கையை ஏற்று, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூபாய் 50 ஆயிரத்துக்குட்பட்ட நிலுவை வரிகளை அடியோடு ரத்து செய்தும் அதற்கு மேல் உள்ள நிலுவை வரியினை எந்தவித அபராதமும் இன்றி, 50 சதவீதம் கட்டினால் போதும் என்று ஆணை பிறப்பித்துள்ளதற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் வணிகர் சங்க இளைஞரணி மாவட்ட செயலாளர் சோலை கணேஷ், கனிராஜன், வேல்முருகன், சூர்யா, சரவணன், தேவேந்திரன் மற்றும் மகளிர் அணி தலைவி சுபத்ரா, மணலி தலைவர் பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.