திண்டல் கிராமத்தில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி
- 18 ம் போர் என்று அழைக்கப்படும் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.
- கூத்துக்கலைஞா்கள் துரியோதனன் வேடம் தரித்தும் பஞ்சபாண்டவா் வேடம் அணித்தும் நடித்துக்காட்டினா்.
காரிமங்கலம்,
தருமபுரி மாவட்டம் திண்டல் கிராமத்தில் திரெளபதி அம்மன் கோவிலில் 7 கிராமமக்கள் மழை வேண்டி பொதுமக்களும் நோய் நொடியின்றி வாழ மஹாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த 18 நாட்களாக நடைபெற்றது.
தருமபுரி மாவட்டத்தில் மஹாபாரத சொற்பொழிவுகள் நடத்திய பின் கூத்துக்கலைஞா்கள் கொண்டு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றால் மழைவரும் என்பது மக்களின் நம்பிக்கை. திண்டல் சுற்றுவட்டாரப்பகுதியில் உள்ள 7கிராம மக்கள் ஒன்றினைந்து மஹாபாரத கதைகளை பகல் பொழுதில் வேதம் பயின்றவா் பொதுமக்களுக்கு சொல்லுவார்.
அவா் குறிப்பிடும் கதைகளுக்கு ஏற்ப இரவு பொழுதில் கூத்துக்கலைஞா்கள் நடித்துக்காட்டுவார்கள்.
இதனையடுத்து மஹாபாரத சொற்பொழிவில் நேற்று 18 ம் நாள் 18 ம் போர் என்று அழைக்கப்படும் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வெற்றிவேல் நாடக சபா கோபால் மற்றும் கூத்துக்கலைஞா்கள் துரியோதனன் வேடம் தரித்தும் பஞ்சபாண்டவா் வேடம் அணித்தும் நடித்துக்காட்டினா்.
இந்த நிகழ்ச்சியை சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பார்த்து சென்றனா். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஊர் தர்மகர்த்தா, மண்டு கவுண்டர் மற்றும் 7 ஊர் கவுண்டர்கள் பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.